கண்ணின் கருவிழி காமன் பகடையாம்
பெண்டீர் உருட்ட பெருகிடும் - திண்காதல்
பன்னீர் மழையும் பகிருமே இல்வாழ்வில்
இன்பம் விளையும் இனி
சுடரும் விழியால் சுடுவாள் சுவையாய்த்
தொடரும் மொழியால் தொடுவாள் - படரும்
கொடிஇடைப் பாமகளே கொல்லும்நின் பார்வை
அடியால் அளந்தே னடி
சிமிட்டா விழிக்குள் சிக்கித் தவிக்க
நிமிட்டும் மனமோ நினைக்க - உமிழ்நீர்
சுரக்கச் சுரக்கச் சுவைபடு காதல்
அரங்கம் பயில அழை
என்னவளே ! வண்ணயெழில் ஏந்திழையாய் ! வாய்மலர்ந்தே
புன்னகையைப் பூக்கும் புதுமலரே ! - கண்ணெதிரே
கண்கவரும் ஒவியமாய்க் காட்சியொளிர் அன்பனெனை
இன்பமுடன் சேர்வாய் இனி-
இராதே