எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
இயற்கை யெழிலே கொஞ்சிடும் ;
அங்கும் இங்கும் எங்குமே
அழகு பசுமை தோன்றிடும் ;
தொங்கு கின்ற காய்கறி
தோற்றம் கண்ணைப் பறித்திடும் ;
பொங்கும் நல்ல பூமணம்
புத்து ணர்வை ஊட்டிடும் !
கட்டங் கட்ட மாகவே
கட்டி வைக்கும் பாத்தியில்
கிட்டுங் கீரை விதைகளைக்
கிளறித் தூவ வளர்ந்திடும் ;
நட்டு வைத்த செடிகொடி
நன்குப் பயனைத் தந்திடும் ;
கொட்டிக் குவியுங் கனிகளைக்
கொடுக்கும் எங்கள் தோட்டமே !
நீங்கள் உங்கள் வீட்டிலே,
நிலவு காயும் மாடியில்
தொங்கும் தோட்டம் போட்டதில்
துளிர்க்கும் பசுமை போற்றுங்கள் ;
தீங்கும் நச்சும் இன்றியே
சிறந்த உணவு விளைந்திடும் ;
வீங்கும் நன்மை பொழிந்திடும்
வீட்டுத் தோட்டம் காண்போமே !
-இராதே
இயற்கை யெழிலே கொஞ்சிடும் ;
அங்கும் இங்கும் எங்குமே
அழகு பசுமை தோன்றிடும் ;
தொங்கு கின்ற காய்கறி
தோற்றம் கண்ணைப் பறித்திடும் ;
பொங்கும் நல்ல பூமணம்
புத்து ணர்வை ஊட்டிடும் !
கட்டங் கட்ட மாகவே
கட்டி வைக்கும் பாத்தியில்
கிட்டுங் கீரை விதைகளைக்
கிளறித் தூவ வளர்ந்திடும் ;
நட்டு வைத்த செடிகொடி
நன்குப் பயனைத் தந்திடும் ;
கொட்டிக் குவியுங் கனிகளைக்
கொடுக்கும் எங்கள் தோட்டமே !
நீங்கள் உங்கள் வீட்டிலே,
நிலவு காயும் மாடியில்
தொங்கும் தோட்டம் போட்டதில்
துளிர்க்கும் பசுமை போற்றுங்கள் ;
தீங்கும் நச்சும் இன்றியே
சிறந்த உணவு விளைந்திடும் ;
வீங்கும் நன்மை பொழிந்திடும்
வீட்டுத் தோட்டம் காண்போமே !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக