வானளந்திடும் புனைத்திறன் பல
வடிவளந்திடும் ''பா'' த்திறன்
தேனளந்திடும் பொருட்சுவை கடல்
திரையளந்திடும் சந்தங்கள்
தானளந்திடும் பார்வையால் கவி
தனையளந்திடும் ''வாணியார்''
கானளந்திடும் வரிகளால் மனங்
கரைபுரண்டிடச் செய்கிறார் ! ( 1 )
உள்ளரும்பிய வார்த்தைகள் வழி
ஊடரம்பிய அணிநலன்
கள்ளரும்பிய தனிநடை புதுக்
கருத்தரும்பிய பாவியம்
வெள்ளரும்புகள் "கொடிமுல்லை" மொழி
விழியரும்புகள் "தமிழச்சி"
சொல்லரும்பிய வாணியின் ஒளிச்
சுடரரும்பிய ஞாலமே ! ( 2 )
துள்ளுகின்றன அழகியல் பொழில்
சூடிநின்றன விருத்தங்கள்
அள்ளுகின்றன சொற்சுவை எழில்
ஆட்சிசெய்திடும் இயற்கையால்
கிள்ளுகின்றன மனத்தினைப் பெருங்
கிளர்ச்சிசெய்திடும் கவிதைகள்
தள்ளுகின்றன கிறக்கித்தில் வாணி
தாசசிந்தனை வேகமோ ? ( 3 )
ஏடுகொண்டன பல்பொருள் நனி
எழுந்துக்கொண்டன வண்ணங்கள்
பீடுகொண்டன கவிநயம் தவப்
பெருமைகொண்டன மொழிவளம்
நாடுகண்டது நற்றழிழ் புவி
நன்மைகண்டது ''வாணியால்''
ஈடுகொண்டநம் கவிஞரை புகழ்
இனிமைகொண்டுநாம் வாழ்த்துவோம் ! ( 4 )
- இராதே
வடிவளந்திடும் ''பா'' த்திறன்
தேனளந்திடும் பொருட்சுவை கடல்
திரையளந்திடும் சந்தங்கள்
தானளந்திடும் பார்வையால் கவி
தனையளந்திடும் ''வாணியார்''
கானளந்திடும் வரிகளால் மனங்
கரைபுரண்டிடச் செய்கிறார் ! ( 1 )
உள்ளரும்பிய வார்த்தைகள் வழி
ஊடரம்பிய அணிநலன்
கள்ளரும்பிய தனிநடை புதுக்
கருத்தரும்பிய பாவியம்
வெள்ளரும்புகள் "கொடிமுல்லை" மொழி
விழியரும்புகள் "தமிழச்சி"
சொல்லரும்பிய வாணியின் ஒளிச்
சுடரரும்பிய ஞாலமே ! ( 2 )
துள்ளுகின்றன அழகியல் பொழில்
சூடிநின்றன விருத்தங்கள்
அள்ளுகின்றன சொற்சுவை எழில்
ஆட்சிசெய்திடும் இயற்கையால்
கிள்ளுகின்றன மனத்தினைப் பெருங்
கிளர்ச்சிசெய்திடும் கவிதைகள்
தள்ளுகின்றன கிறக்கித்தில் வாணி
தாசசிந்தனை வேகமோ ? ( 3 )
ஏடுகொண்டன பல்பொருள் நனி
எழுந்துக்கொண்டன வண்ணங்கள்
பீடுகொண்டன கவிநயம் தவப்
பெருமைகொண்டன மொழிவளம்
நாடுகண்டது நற்றழிழ் புவி
நன்மைகண்டது ''வாணியால்''
ஈடுகொண்டநம் கவிஞரை புகழ்
இனிமைகொண்டுநாம் வாழ்த்துவோம் ! ( 4 )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக