இரவில் ஒளிரும் விண்மீன் கூட்டம்
இயற்கை எழிலில் இமைத்தட்டும் ;
அரவு தீண்டி உலவும் நிலவு
அழகாய்ப் பொங்கிச் சினங்காட்டும் ;
தரவு சொல்லும் முகிலின் கூட்டம்
சலவை நிலவின் முகம்பூட்டும் ;
திரண்டக் காற்று திறவு கோலாய்த்
திறந்து முகிலின் இடிதட்டும் ! ( 1 )
ஆனைத் தும்பிக் கையை நீட்டி
ஆவ லோடு பசிக்கேங்கும் ;
பானை வாயின் சோறு போலப்
பரவும் நிலவு விழப்பார்க்கும் ;
தூணை யொத்த கால்கள் இடையே
துடுக்காய்க் குட்டி மடிமுட்டும் ;
தேனைச் சுரக்கும் அருவி யாகி
திரளும் பாலே தரைக்கெட்டும் ! ( 2 )
மலையில் வீழும் பாலே ஆறாய்
மடியி லிருந்து பெருத்தோடும் ;
அலைகள் எழும்பும் கரையின் ஓரம்
ஆரைத் துள்ளி நடமாடும் ;
வலைகள் வீசி மீன்கள் அள்ள
வந்த கூட்டம் அலைமோதும் ;
தொலைவில் பறக்கும் பருந்து இறங்கி
துடிக்கும் மீன்கள் எடுத்தோடும் ! ( 3 )
- இராதே
இயற்கை எழிலில் இமைத்தட்டும் ;
அரவு தீண்டி உலவும் நிலவு
அழகாய்ப் பொங்கிச் சினங்காட்டும் ;
தரவு சொல்லும் முகிலின் கூட்டம்
சலவை நிலவின் முகம்பூட்டும் ;
திரண்டக் காற்று திறவு கோலாய்த்
திறந்து முகிலின் இடிதட்டும் ! ( 1 )
ஆனைத் தும்பிக் கையை நீட்டி
ஆவ லோடு பசிக்கேங்கும் ;
பானை வாயின் சோறு போலப்
பரவும் நிலவு விழப்பார்க்கும் ;
தூணை யொத்த கால்கள் இடையே
துடுக்காய்க் குட்டி மடிமுட்டும் ;
தேனைச் சுரக்கும் அருவி யாகி
திரளும் பாலே தரைக்கெட்டும் ! ( 2 )
மலையில் வீழும் பாலே ஆறாய்
மடியி லிருந்து பெருத்தோடும் ;
அலைகள் எழும்பும் கரையின் ஓரம்
ஆரைத் துள்ளி நடமாடும் ;
வலைகள் வீசி மீன்கள் அள்ள
வந்த கூட்டம் அலைமோதும் ;
தொலைவில் பறக்கும் பருந்து இறங்கி
துடிக்கும் மீன்கள் எடுத்தோடும் ! ( 3 )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக