முட்டை தட்டை வடிவமே
மூட்டைப் பூச்சி வடிவமாம் ;
கட்டில் படுக்கை , பாயிலே ,
கதவின் இடுக்கின் ஓரத்தில்,
வீட்டின் மூலை முடுக்கெல்லாம்
விரைவில் பதுங்கி வாழ்ந்திடும் ;
கெட்டி அரக்கு நிறத்திலே
கேடு செய்யும் பூச்சிது !
இரவில் வெளியில் வலம்வரும் ;
இரத்தங் குடித்தே உயிர்பெறும் ;
உரசும் இரண்டு குழல்களால்
உடலில் துளைகள் இட்டிடும் ;
உரசும் உணர்வு மங்கிட
ஒன்றில் உமிழ்நீர்ப் பாய்ச்சிடும் ;
உரசும் மற்ற குழலினால்
உறிஞ்சி குருதி குடித்திடும் !
மனித உடலின் சூட்டையும்,
மனித கரிம வாடையும்,
இனிய சூழ லாக்கியே
இரவு வேட்டை ஆடிடும் ;
அணிகள் அணிக ளாகவே
அமைதி காத்துத் தாக்கிடும் ;
துணிவு மிக்க பூச்சிது ;
தூக்கங் கெடுக்கும் பூச்சிது !
கடித்த இடத்தில் தடித்திடும் ;
கடுமை யாக அரித்திடும் ;
அடித்து நசுக்க முயற்சித்தால்
அடுத்த நொடியில் மறைந்திடும் ;
பிடிக்கத் துரத்தி ஓடுங்கள் ;
பிதுக்கி அழுத்தி கொல்லாது ,
பிடித்து தீயில் பொசுக்குங்கள் ;
பின்னர் கையைக் கழுவுங்கள் !
-இராதே
மூட்டைப் பூச்சி வடிவமாம் ;
கட்டில் படுக்கை , பாயிலே ,
கதவின் இடுக்கின் ஓரத்தில்,
வீட்டின் மூலை முடுக்கெல்லாம்
விரைவில் பதுங்கி வாழ்ந்திடும் ;
கெட்டி அரக்கு நிறத்திலே
கேடு செய்யும் பூச்சிது !
இரவில் வெளியில் வலம்வரும் ;
இரத்தங் குடித்தே உயிர்பெறும் ;
உரசும் இரண்டு குழல்களால்
உடலில் துளைகள் இட்டிடும் ;
உரசும் உணர்வு மங்கிட
ஒன்றில் உமிழ்நீர்ப் பாய்ச்சிடும் ;
உரசும் மற்ற குழலினால்
உறிஞ்சி குருதி குடித்திடும் !
மனித உடலின் சூட்டையும்,
மனித கரிம வாடையும்,
இனிய சூழ லாக்கியே
இரவு வேட்டை ஆடிடும் ;
அணிகள் அணிக ளாகவே
அமைதி காத்துத் தாக்கிடும் ;
துணிவு மிக்க பூச்சிது ;
தூக்கங் கெடுக்கும் பூச்சிது !
கடித்த இடத்தில் தடித்திடும் ;
கடுமை யாக அரித்திடும் ;
அடித்து நசுக்க முயற்சித்தால்
அடுத்த நொடியில் மறைந்திடும் ;
பிடிக்கத் துரத்தி ஓடுங்கள் ;
பிதுக்கி அழுத்தி கொல்லாது ,
பிடித்து தீயில் பொசுக்குங்கள் ;
பின்னர் கையைக் கழுவுங்கள் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக