கும்மிய டிபெண்கள் கும்மியடி - எழிற்
கொங்கை குழைந்தாடக் கும்மியடி
நண்பன் ராமசாமி நற்கவி வாணனை
நாடிக் கும்மிய டியுங்கடி - புகழ்ப்
பாடிக் கும்மிய டியுங்கடி (கும்மி )
நற்றமிழ்ப் பாடிடும் சித்த னடி - உயிர்
நாதமொ ளிர்கலைப் பித்த னடி
உற்றவர் நட்புடைக் கர்த்த னடி- உள
உறவை மதிக்கின்ற சுத்த னடி (கும்மி )
ஆனந்தத் தாண்டவக் கூத்த னடி - நமை
அன்பி லசைத்தாடும் நர்த்த னடி
கோனரிக் குப்பத்து மக்கள் மகிழ் - நனிக்
கோலன டிகுண வாள னடி (கும்மி )
பண்புடன் பாடல்செய் ஐய னடி - நண்பர்
பாச மிகஒளிர் மெய்ய னடி
கண்ணிய மிக்கக் கலைஞ னடி - உளக்
கள்வன டிஉயர் செல்வ னடி (கும்மி )
மக்கள் கலைகளின் நேய னடி - கலை
மக்கள் போற்றுமுயர் தூய னடி
சொக்கத் தமிழோது வாய னடி - வெல்லும்
சொல்லன டிப்புகழ் மாய னடி (கும்மி )
-இராதே