பாரதி தாசன்
( காவடிச்சிந்து )
( கன்னல் சூழ்பழ னம்புடை சூழ்கழு )
தென்றல் சேர்நில வின்குளிர் சேர்மன
தேரி னில்வரும் மாக்கவி ராசனே ! - பாடல்
வாரி யெங்கும்வீ சும்மொழி நேசனே ! - எழில்
செந்தமிழிசை எம்பிநின்திரு
உந்துதலுற நம்பிக்கையொடு
சேவை செய்கவி பாரதி தாசனே ! - தமிழ்
நாவை வைத்துல கையாளும் ஈசனே !
இன்னல் சூழ்உழ லும்இனஞ் சூழ்தமிழ்
ஏற்ற மும்பெற 'பா'உரை நேயனே ! - பகை
தோற்க வே'கொலை வாள்'விடு மாயனே ! - தவ
இன்பமாத்தமிழ் எங்கும்மேவிட
நன்குசங்குமு ழங்கவேயொலி
எட்டுத் திக்குமி சைத்தநல் தூயனே ! - நனிச்
சொட்டும் சொற்றமிழ்ச் சொல்லுஞ்சொல் வாயனே !
பைந்த மிழர்ப் பெருமைகள் தேடியே
பாவேந் தரென்றச் சிறப்பைச் சூடியே - பெற்ற
பட்டங் களாமோ எத்தனைக் கோடியே - தேன்
பாகெனக்கவி யோஇனித்திடும்
வாகெனமன மோசுவைத்திடும்
பாண்டி யன்பரி சாங்கவி பாடியே - மொழித்
தாண்ட வமாடு தாம்மகிழ்ந் தாடியே
சிந்த னைக்குளே 'அழகின் சிரிப்பாம்'
சிந்த னைக்குளே 'அழகின் சிரிப்பாம்'
சீர்மை குடும்ப விளக்கின் குறிப்பாம் ! - இல்லத்
தீமை அப்பு'மி ருண்டவீடு' தெறிப்பாம் ! - கவி
தேறலூறிடும் பாடலாயிரம்
மீறவேயிலை 'பா' இலக்கணம்
செப்பு வேர்த்தமிழ்ப் புரட்சி நெருப்பாம் ! - கனக
சுப்பு ரத்தினம் தமிழர் இருப்பாம் ! - இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக