அழுகையைச் சொல்லிச் சொல்லி
அழுதிட வந்தே னிங்கே ;
அழுகையின் உணர்வைக் கூறி
அழுகையில் வந்தே னின்று ;
அழுகையால் வாடத் தானோ
அன்னையோ பெற்றால் என்னை
அழுகையைப் பாட யானே
அதிசயப் பொருத்த மானேன் !
அழுகைதான் பிறக்கும் போதும் ;
அழுகைதான் இறக்கும் போதும் ;
அழுகைதான் சிரிக்கும் போதும் ;
அழுகைதான் சிறக்கும் போதும் ;
அழுகைதான் உள்ளத் துள்ளே
அடங்கிடும் அழுக்கை யெல்லாம்
அழுக்குடன் வெளியே தள்ளி
அகத்தினைத் தூய்மை செய்யும் !
விழிகளில் ஊறி நீராய்
விழுந்திடும் அருவி கண்ணீர் ;
பழிகளைத் தாங்கித் தாங்கிப்
பாய்ந்திடும் வெள்ளம் கண்ணீர் ;
மொழிந்திடும் சொற்கள் நோக
முகிழ்த்திடும் முள்ளாய்க் கண்ணீர் ;
பொழிந்திடும் அழுகை யெல்லாம்
புலன்களின் உறுத்த லன்றோ ?
கன்னியின் காதல் தோல்வி
கைவரக் கரைந்த கண்ணீர் ;
நண்பரோ முதுகில் குத்த
நனைந்திட அழுத கண்ணீர் ;
திண்ணிய நெஞ்சம் ஓயத்
திரட்சியில் சிந்தும் கண்ணீர் ;
எண்ணிய எல்லாம் வீழ
எழுந்திடும் திவலைக் கண்ணீர் ;
நலிந்தவர் வாழ்வை மெல்ல
நசிக்கிடும் முதலைக் கண்ணீர் ;
வலிமையால் சதியைத் தீட்டி
வடித்திடும் நீலிக் கண்ணீர் ;
பொலிவுறும் ஊரை ஏய்க்கப்
பூத்திடும் போலிக் கண்ணீர் ;
மலிவினில் மதுவை உண்டு
மயங்கிடும் போதைக் கண்ணீர் ;
பாசமாய் வரலாம் கண்ணீர் ;
பரிவினில் வரலாம் கண்ணீர் ;
நேசமாய் வரலாம் கண்ணீர் ;
நெகிழ்வினில் வரலாம் கண்ணீர் ;
பூசலாய்த் தருமே கண்ணீர்
பூட்டிய அன்பைக் காட்ட
ஆசையில் அழுகை வந்தே
அடக்கவே இயலா தோடும் !
இம்மியும் இடைவி டாமல்
இழுத்தழும் நாசி தானே
விம்மியே கதறிக் கூவி
விக்கலில் கேவி நின்று
கம்மலாய்க் குரலும் மாறிக்
கட்டிய தொண்டை யுண்டு ;
தெம்பின்றி முணகித் திக்குத்
தேம்பிடும் திணற லுண்டு ;
ஓலமிட் டலற லென்றும்
ஒப்பாரி அழுகை யென்றும்
தாளமாய்க் குலுங்கி நின்று
தவிப்பிலே அழுவ தென்றும்
நாளத்தில் விறைப்புக் குன்றி
நடுங்கியே அழுவ தென்றும்
காலமாய் அழுது தீர்த்த
காவியம் பலவும் கண்டோம் !
கண்ணிலே தூசி பட்டுக்
கலங்கிட அழுகை கண்டோம் ;
புண்ணிலே பட்ட பாட்டால்
புலம்பிட அழுகை கண்டோம் ;
மண்ணிலே பட்ட துன்பம்
மண்டிட அழுகை கண்டோம் ;
கண்ணிலே விளையும் உப்பின்
கரைசலே அழுகை யன்றோ ?
அழுவதை நிறுத்து போதும்
அவரவர் கால்கள் பற்றித்
தொழுவதை மறுத்து பாரும்
தோன்றிடும் தெளிவு மின்னல்
விழுகின்ற மனதைத் தூக்கி
விறைபுடன் உயர்த்து மேலே
எழுகின்ற நம்பிக் கையால்
இமயமும் துகலாய் மாறும் !
-இராதே
அழுதிட வந்தே னிங்கே ;
அழுகையின் உணர்வைக் கூறி
அழுகையில் வந்தே னின்று ;
அழுகையால் வாடத் தானோ
அன்னையோ பெற்றால் என்னை
அழுகையைப் பாட யானே
அதிசயப் பொருத்த மானேன் !
அழுகைதான் பிறக்கும் போதும் ;
அழுகைதான் இறக்கும் போதும் ;
அழுகைதான் சிரிக்கும் போதும் ;
அழுகைதான் சிறக்கும் போதும் ;
அழுகைதான் உள்ளத் துள்ளே
அடங்கிடும் அழுக்கை யெல்லாம்
அழுக்குடன் வெளியே தள்ளி
அகத்தினைத் தூய்மை செய்யும் !
விழிகளில் ஊறி நீராய்
விழுந்திடும் அருவி கண்ணீர் ;
பழிகளைத் தாங்கித் தாங்கிப்
பாய்ந்திடும் வெள்ளம் கண்ணீர் ;
மொழிந்திடும் சொற்கள் நோக
முகிழ்த்திடும் முள்ளாய்க் கண்ணீர் ;
பொழிந்திடும் அழுகை யெல்லாம்
புலன்களின் உறுத்த லன்றோ ?
கன்னியின் காதல் தோல்வி
கைவரக் கரைந்த கண்ணீர் ;
நண்பரோ முதுகில் குத்த
நனைந்திட அழுத கண்ணீர் ;
திண்ணிய நெஞ்சம் ஓயத்
திரட்சியில் சிந்தும் கண்ணீர் ;
எண்ணிய எல்லாம் வீழ
எழுந்திடும் திவலைக் கண்ணீர் ;
நலிந்தவர் வாழ்வை மெல்ல
நசிக்கிடும் முதலைக் கண்ணீர் ;
வலிமையால் சதியைத் தீட்டி
வடித்திடும் நீலிக் கண்ணீர் ;
பொலிவுறும் ஊரை ஏய்க்கப்
பூத்திடும் போலிக் கண்ணீர் ;
மலிவினில் மதுவை உண்டு
மயங்கிடும் போதைக் கண்ணீர் ;
பாசமாய் வரலாம் கண்ணீர் ;
பரிவினில் வரலாம் கண்ணீர் ;
நேசமாய் வரலாம் கண்ணீர் ;
நெகிழ்வினில் வரலாம் கண்ணீர் ;
பூசலாய்த் தருமே கண்ணீர்
பூட்டிய அன்பைக் காட்ட
ஆசையில் அழுகை வந்தே
அடக்கவே இயலா தோடும் !
இம்மியும் இடைவி டாமல்
இழுத்தழும் நாசி தானே
விம்மியே கதறிக் கூவி
விக்கலில் கேவி நின்று
கம்மலாய்க் குரலும் மாறிக்
கட்டிய தொண்டை யுண்டு ;
தெம்பின்றி முணகித் திக்குத்
தேம்பிடும் திணற லுண்டு ;
ஓலமிட் டலற லென்றும்
ஒப்பாரி அழுகை யென்றும்
தாளமாய்க் குலுங்கி நின்று
தவிப்பிலே அழுவ தென்றும்
நாளத்தில் விறைப்புக் குன்றி
நடுங்கியே அழுவ தென்றும்
காலமாய் அழுது தீர்த்த
காவியம் பலவும் கண்டோம் !
கண்ணிலே தூசி பட்டுக்
கலங்கிட அழுகை கண்டோம் ;
புண்ணிலே பட்ட பாட்டால்
புலம்பிட அழுகை கண்டோம் ;
மண்ணிலே பட்ட துன்பம்
மண்டிட அழுகை கண்டோம் ;
கண்ணிலே விளையும் உப்பின்
கரைசலே அழுகை யன்றோ ?
அழுவதை நிறுத்து போதும்
அவரவர் கால்கள் பற்றித்
தொழுவதை மறுத்து பாரும்
தோன்றிடும் தெளிவு மின்னல்
விழுகின்ற மனதைத் தூக்கி
விறைபுடன் உயர்த்து மேலே
எழுகின்ற நம்பிக் கையால்
இமயமும் துகலாய் மாறும் !
-இராதே
அருமை
பதிலளிநீக்கு