திங்கள் பிறையே ! திருத்தேரே !
துவளு முழவர்க் காப்பகமே !
தெருவி லிறங்கிப் போராடித்
திருயே ருழவர் கடன்தீர்த்தாய் !
மங்கா ஒளியே ! மரிக்கடலே !
மதிப்பில் மிளிர்ந்த மணிமுத்தே !
மயங்கா மனமே ! அதிதீரா !
மண்டும் வைர பேரொளியே !
சங்காய் முழங்கித் தொழிலாளர்த்
தடைகள் தகர்த்த தனிவீரா !
சகடம் போலே உழைக்கின்ற
தன்னி கரில்லா பெருந்தலைவா !
எங்கு மெழுச்சிப் புயலாகி
எளியோர் வாழ்வைக் காப்பவனே !
எளிமை குன்றே ! நல்லகண்ணே !
எழுந்து தடந்தேர் உருட்டகவே !
-இராதே
துவளு முழவர்க் காப்பகமே !
தெருவி லிறங்கிப் போராடித்
திருயே ருழவர் கடன்தீர்த்தாய் !
மங்கா ஒளியே ! மரிக்கடலே !
மதிப்பில் மிளிர்ந்த மணிமுத்தே !
மயங்கா மனமே ! அதிதீரா !
மண்டும் வைர பேரொளியே !
சங்காய் முழங்கித் தொழிலாளர்த்
தடைகள் தகர்த்த தனிவீரா !
சகடம் போலே உழைக்கின்ற
தன்னி கரில்லா பெருந்தலைவா !
எங்கு மெழுச்சிப் புயலாகி
எளியோர் வாழ்வைக் காப்பவனே !
எளிமை குன்றே ! நல்லகண்ணே !
எழுந்து தடந்தேர் உருட்டகவே !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக