( தான தனதன தான தனதன
தான தனதன தனத்தானா )
ஆதி பகவனை ஓதி அறமதை
ஆளு முலகெழ உரைத்தோனே
ஐய மறுபட வைய முழுமறை
ஆழ மொழிநடை வகுத்தோனே
சேதி நடைமுறை கேடு விடுபடும்
சீல முடனதை வடித்தோனே
தேடு மொழிவளம் மேவ அருளிய
தேறு மறையினை அளித்தோனே
மேதி னியிலொரு ஞான முளைவிட
வீறு மறைதரு எழுத்தோனே
மேவு ஒலியென நீடு குறளிசை
மீள எழிலுற இசைத்தோனே
நீதி எடுபட மோன முடைபட
நீள அறவுரை விடுத்தோனே
நேய மனமிகு ஞால மொழியிடை
நேதி நிறுவிட முனைந்தோனே
-இராதே
நேதி = முறை
தான தனதன தனத்தானா )
ஆதி பகவனை ஓதி அறமதை
ஆளு முலகெழ உரைத்தோனே
ஐய மறுபட வைய முழுமறை
ஆழ மொழிநடை வகுத்தோனே
சேதி நடைமுறை கேடு விடுபடும்
சீல முடனதை வடித்தோனே
தேடு மொழிவளம் மேவ அருளிய
தேறு மறையினை அளித்தோனே
மேதி னியிலொரு ஞான முளைவிட
வீறு மறைதரு எழுத்தோனே
மேவு ஒலியென நீடு குறளிசை
மீள எழிலுற இசைத்தோனே
நீதி எடுபட மோன முடைபட
நீள அறவுரை விடுத்தோனே
நேய மனமிகு ஞால மொழியிடை
நேதி நிறுவிட முனைந்தோனே
-இராதே
நேதி = முறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக