அந்த
பூனையின்
கதவு திறப்பில்
ஆடிப்போனது
இதயம்
உருட்டு விழிகள்
திருட்டு நடை
ஓசையின்றி
வைக்கும்
காலடியால்
உருளப் போகும்
பாத்திரங்களின்
ஓசை!
கருவாடோ?
பாலோ?
கொட்டிக் கவிழ்த்து
சுவைத்து விடுகின்றன
ருசிகண்ட
பூனைகள்!
அமைதி கெடும்
மியாவ்
சத்தங்கள்
குழப்பங்களுடன்
குடும்பங்கள்
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக