தீவனூரு சாமிசுற்றும் தெப்பம் ! - மகம்
திருநாளும் கண்டிடுமே செப்பம் ! - உயர்
செழுயர்தி ருக்குளத்தின்
வழியுந்தண் ணீர்வளத்தைத்
தேனே - செப்பு
வேனே !
ஆவலுடன் தாமரையும் பூக்கும் ! - நிலா
அந்தியெழ அல்லிமலர் நோக்கும் ! - கெண்டை
அள்ளியெழ துள்ளிவிழ
வெள்ளியலை மென்மையுடன்
அணையும் ! - கரை
நனையும் !
மூன்றுபக்கம் நீரடைய படிகள் ! - சிறார்
முந்தியெழும் சில்லெறியும் அடிகள் ! - கொக்கு
முங்கியெழும் மீனடைய
ஏங்கும்நிலை வாடியெழும்
முயற்சி ! - ஊக்கப்
பயிற்சி !
மீன்கொத்திகள் மீனடித்தே பறக்கும் ! - துறை
மேவுமலர் தேனொழுகச் சுரக்கும் ! - வண்டு
மென்மையுறத் தேன்பருகி
இன்பமுறும் இன்னிசையை
மீட்டும் ! - சுவை
கூட்டும் !
தென்னையொடு பாக்குமரத் தோட்டம் ! - அதில்
சேர்ந்திசைவ ழங்குகுயில் கூட்டம் ! - ஒன்பான்
சித்திரமாய் வீடுதொடர்
முத்திரைப்ப தித்துவரும்
திண்ணை ! - எழில்
பண்ணை !
திண்ணைதொறும் தாண்டிடுவர் சிறுவர் ! - இன்பம்
சேர்ந்தணைய மகிழ்வினையும் பெறுவர் ! - கலை
தேடுதலும் நாடகமும்
ஊடுப்பய னாகவுடன்
விளங்கும் ! - இங்குத்
துலங்கும் !
ஆனைமுக ஆண்டவனின் கோயில் ! - வளர்
அரசமரத் தடிநிழலின் வாயில் ! - நீல
ஆலமுள நாகமுடன்
வேலவனும் சேர்ந்துறையும்
அழகு ! - காணப்
பழகு !
தூணளவு விட்டமுள பனைகள் ! - கீழ்த்
தொங்குகிற வாவலுடன் இணைகள் ! - பழம்
தொப்பெனவே எக்கிவிழ
துப்பிவிளை யாடும்அணில்
காட்சி ! - நோக்க
மாட்சி !
சிந்தைகவர் வெண்மையொளிர் மாடம் ! - நிலை
செப்புகிற சீரழகுக் கூடம் ! - பெருந்
தோற்றமுடன் பண்டையெழில்
சாற்றுகிற கண்கவரும்
துணையாம் ! - வள
மனையாம் !
விந்தையுள பல்கதையும் பேசும் ! - நெடு
வீரவர லாறுமணம் வீசும் ! - நீடு
மிக்கபுகழ் வாழ்வுடனே
தக்கநிலை கொண்டதமிழ்
நேசன் ! - தேவ
தாசன் !
-இராதே
திருநாளும் கண்டிடுமே செப்பம் ! - உயர்
செழுயர்தி ருக்குளத்தின்
வழியுந்தண் ணீர்வளத்தைத்
தேனே - செப்பு
வேனே !
ஆவலுடன் தாமரையும் பூக்கும் ! - நிலா
அந்தியெழ அல்லிமலர் நோக்கும் ! - கெண்டை
அள்ளியெழ துள்ளிவிழ
வெள்ளியலை மென்மையுடன்
அணையும் ! - கரை
நனையும் !
மூன்றுபக்கம் நீரடைய படிகள் ! - சிறார்
முந்தியெழும் சில்லெறியும் அடிகள் ! - கொக்கு
முங்கியெழும் மீனடைய
ஏங்கும்நிலை வாடியெழும்
முயற்சி ! - ஊக்கப்
பயிற்சி !
மீன்கொத்திகள் மீனடித்தே பறக்கும் ! - துறை
மேவுமலர் தேனொழுகச் சுரக்கும் ! - வண்டு
மென்மையுறத் தேன்பருகி
இன்பமுறும் இன்னிசையை
மீட்டும் ! - சுவை
கூட்டும் !
தென்னையொடு பாக்குமரத் தோட்டம் ! - அதில்
சேர்ந்திசைவ ழங்குகுயில் கூட்டம் ! - ஒன்பான்
சித்திரமாய் வீடுதொடர்
முத்திரைப்ப தித்துவரும்
திண்ணை ! - எழில்
பண்ணை !
திண்ணைதொறும் தாண்டிடுவர் சிறுவர் ! - இன்பம்
சேர்ந்தணைய மகிழ்வினையும் பெறுவர் ! - கலை
தேடுதலும் நாடகமும்
ஊடுப்பய னாகவுடன்
விளங்கும் ! - இங்குத்
துலங்கும் !
ஆனைமுக ஆண்டவனின் கோயில் ! - வளர்
அரசமரத் தடிநிழலின் வாயில் ! - நீல
ஆலமுள நாகமுடன்
வேலவனும் சேர்ந்துறையும்
அழகு ! - காணப்
பழகு !
தூணளவு விட்டமுள பனைகள் ! - கீழ்த்
தொங்குகிற வாவலுடன் இணைகள் ! - பழம்
தொப்பெனவே எக்கிவிழ
துப்பிவிளை யாடும்அணில்
காட்சி ! - நோக்க
மாட்சி !
சிந்தைகவர் வெண்மையொளிர் மாடம் ! - நிலை
செப்புகிற சீரழகுக் கூடம் ! - பெருந்
தோற்றமுடன் பண்டையெழில்
சாற்றுகிற கண்கவரும்
துணையாம் ! - வள
மனையாம் !
விந்தையுள பல்கதையும் பேசும் ! - நெடு
வீரவர லாறுமணம் வீசும் ! - நீடு
மிக்கபுகழ் வாழ்வுடனே
தக்கநிலை கொண்டதமிழ்
நேசன் ! - தேவ
தாசன் !
-இராதே
காவடி சிந்து நன்று
பதிலளிநீக்கு