இராதே

இராதே
eradevadassou

சனி, 19 மார்ச், 2022

வாழைத்தண்டு

 வாழைத்தண்டு (96) 



 வாழைத் தண்டு நல்லுணவாம் 

 வளருந் தசைக்கு நல்லுரமாம் ; 

வாழைத் தண்டின் சமையலிலே 

 வளமை யெல்லாம் அணிசேரும் ; 

வாழைத் தண்டை உண்பதினால் 

 மறையுங் குருதிச் சோகையுமே ; 

வாழைத் தண்டை மகிழ்ந்துண்டே 

 வலிமை உடலைப் பெற்றிடுவோம் ! 



 குடலில் சிக்கும் தலைமுடியைக் 

 குடலை விட்டே வெளியேற்றும் ; 

குடலின் நச்சுக் கழிவுகளின் 

 குடியைக் கெடுத்தே அகற்றிவிடும் ; 

குடலின் அமிலப் பெருக்கத்தைக் 

 குன்றச் செய்தே சமப்படுத்தும் ; 

உடலின் எடையைக் குறைத்துவிடும் 

 உணவுச் செரிக்க வழிவகுக்கும் ! 



 சிறுநீர்த் தொற்றை விரட்டிவிடும் 

 சிறுநீர்ப் பாதை தூய்மையுறும் ; 

சிறுநீர்ச் சுருக்கும், எரிச்சலும் 

 சிறப்பாய் நிற்கும் குணமாகும் ; 

சிறுநீர்க் கற்கள் கரைந்துவிடும் 

 சிறுநீ ரகத்தின் காவலனாம் ; 

சிறுக சிறுக நீரிழிவைச் 

 சிதைக்கும் வாழைத் தண்டுண்போம் ! 


                                                             - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக