குடியை அழிக்கும் கெடுகுடி;
குனிவைக் கொடுக்கும் நுகத்தடி;
அடிமை போதை சொற்படி;
அறிவும் இயங்கா முறைப்படி;
அடிதடி சண்டை கெடுபிடி;
அரங்கேற் றிடுமே மொடாக்குடி;
மடியும் வீட்டின் புகழ்க்கொடி;
மதிப்பைக் கெடுக்கும் பெருங்குடி!
கடனில் குடும்பம் விழும்படி,
கண்ணீர் சிந்தி அழும்படி
அடகுக் கடையில் தாலிக்கொடி,
அண்டா குண்டான் உருப்படி
உடமை அனைத்தும் வைத்தபடி
உழலும் வீட்டில் நெருக்கடி;
மடமை நிறைந்த இக்குடி
மனித உயிர்க்குக் கன்னிவெடி!
தெருவில் குடும்பம் வரும்படி
திசைமாற் றிடுமே மதுக்குடி;
துரும்பாய் இளைத்துக் கெடும்படி
தொல்லை அல்லல் உறும்படி
உருவம் குலைந்து விடும்படி
உண்டாக் கிடுமே நோய்நொடி;
மருகும் குடியின் செப்படி
வருத்தி யெடுக்கும் மரணடி!
அன்பை இழக்கும் முதற்படி;
அனைந்தத் தீயின் அடுப்படி;
பண்பை முறிக்கும் பிரம்படி;
பழக்க வழக்கக் குளறுபடி;
துன்பம் வீட்டைத் தொடும்படி
துரத்தும் அரக்கன் கைப்பிடி;
இன்பம் வேண்டின் இக்குடி
இன்றி நடப்பாய் தினப்படி!
குடியால் வருமே கெட்டநெடி;
குடியின் வெறியில் ஆட்டமடி;
குடியால் குணங்கள் தவிடுபொடி;
குடியால் கிடைக்கும் செருப்படி;
குடியை மறப்பாய் நல்லபடி
குடித்தால் வாழ்வே தள்ளுபடி;
குடியை விட்ட செயல்படி
கூடின் வாழ்வு செல்லுபடி!
அழுக்குக் கறையாம் மதுக்குடி
அறவே இல்லை எனும்படி
முழுக்கத் திருந்தும் வகைப்படி
முயன்றே நிறுத்து பெருங்குடி;
ஒழுக்கக் கேட்டின் எடுபிடி
ஒழிய வேண்டிக் கொடிபிடி;
இழுக்க வாழ்வு மறுபடி
இல்லை என்றே கடைப்பிடி!
-இராதே
குனிவைக் கொடுக்கும் நுகத்தடி;
அடிமை போதை சொற்படி;
அறிவும் இயங்கா முறைப்படி;
அடிதடி சண்டை கெடுபிடி;
அரங்கேற் றிடுமே மொடாக்குடி;
மடியும் வீட்டின் புகழ்க்கொடி;
மதிப்பைக் கெடுக்கும் பெருங்குடி!
கடனில் குடும்பம் விழும்படி,
கண்ணீர் சிந்தி அழும்படி
அடகுக் கடையில் தாலிக்கொடி,
அண்டா குண்டான் உருப்படி
உடமை அனைத்தும் வைத்தபடி
உழலும் வீட்டில் நெருக்கடி;
மடமை நிறைந்த இக்குடி
மனித உயிர்க்குக் கன்னிவெடி!
தெருவில் குடும்பம் வரும்படி
திசைமாற் றிடுமே மதுக்குடி;
துரும்பாய் இளைத்துக் கெடும்படி
தொல்லை அல்லல் உறும்படி
உருவம் குலைந்து விடும்படி
உண்டாக் கிடுமே நோய்நொடி;
மருகும் குடியின் செப்படி
வருத்தி யெடுக்கும் மரணடி!
அன்பை இழக்கும் முதற்படி;
அனைந்தத் தீயின் அடுப்படி;
பண்பை முறிக்கும் பிரம்படி;
பழக்க வழக்கக் குளறுபடி;
துன்பம் வீட்டைத் தொடும்படி
துரத்தும் அரக்கன் கைப்பிடி;
இன்பம் வேண்டின் இக்குடி
இன்றி நடப்பாய் தினப்படி!
குடியால் வருமே கெட்டநெடி;
குடியின் வெறியில் ஆட்டமடி;
குடியால் குணங்கள் தவிடுபொடி;
குடியால் கிடைக்கும் செருப்படி;
குடியை மறப்பாய் நல்லபடி
குடித்தால் வாழ்வே தள்ளுபடி;
குடியை விட்ட செயல்படி
கூடின் வாழ்வு செல்லுபடி!
அழுக்குக் கறையாம் மதுக்குடி
அறவே இல்லை எனும்படி
முழுக்கத் திருந்தும் வகைப்படி
முயன்றே நிறுத்து பெருங்குடி;
ஒழுக்கக் கேட்டின் எடுபிடி
ஒழிய வேண்டிக் கொடிபிடி;
இழுக்க வாழ்வு மறுபடி
இல்லை என்றே கடைப்பிடி!
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக