இராதே

இராதே
eradevadassou

புதன், 16 செப்டம்பர், 2020


 நாடகத் தந்தை

தவத்திரு சங்கரதாசு சுவாமிகள்

( காவடிச் சிந்து )


சிந்தை நாடகம் மண்ணிடை வாழ்வித்த
தீந்தமிழ் சங்கர தாசர் ! - தமிழ்ச்
சந்தத்தி லாடிடும் நேசர் ! - உயர்
தீங்கனிச்சுவை சங்க நாடகம்
எங்கும்மேவிட கங்கையாறென
சென்றெலாம்புவி மீதினில் பேர்சொல
தீரமாய் ஓதிய ராசர் ! - கலை
சேர்ந்தெழ பேருப தேசர் !

எந்த நேரமும் சிந்தனைச் சொற்படி
எண்ணிடும் மாந்தவி லாசர் ! - இசை
பண்ணிடும் மெய்ஞான வாசர் ! - விண்
இந்தெழுந்து விளங்குவேளையில்
சிந்தெடுத்து முழங்கும் பாப்புயல்
ஈந்த நாடக மாகதை கூத்துகள்
எண்ணும் ப டிசெய்தார் மானே ! - அவர்
என்றென்றும் மாகவி தானே !


பொங்கு மாசனி இந்திரன் பாழ்எமன்
போன்றுள வேடங்கள் பூண்டார் ! - அஞ்சி
பூவைய ருள் சிலர் மாண்டர் ! - இனி
புண்ணியநதி தேடிபூம்புனல்
சென்றாடி துற வேந்தி நாடகம்
போடுதலிலை ஆனமுடிவிற் கேற்றபடி
புண்பட்ட நெஞ்சிடை நொந்தார் ! - கதை
புனைய மீண்டும்மு னைந்தார் !


எங்கும் நாடகம் என்றொரு சூழலை
எம்தமிழ் நாட்டிற்குத் தந்தார் ! - தமிழை
எங்கெங்கும் காணவி ழைந்தார் ! - சாமி
ஈந்தநல்லிசை நேர்த்திசந்தங்கள்
ஏந்தும்சிந்தோடு மின்னும் நாடகம்
எல்லோருங் காணுற நற்றமிழ்
இன்பங்க ளாளப் பொ ழிந்தார் ! - புதுவை
மண்ணிலே சாமி ம றைந்தார் !

- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக