இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தோழர் ஜீவா

                                              



  

இலக்கியம்   பேசும்   இளந்தென்றல் !   இன்பம்
துலக்கும்   தமிழனின்   தூவல் !- புலரும்
சிவப்புப்   பரிதி !   சிறக்கும்   பொதுமைக்
கவர்ந்த   இனிப்புக்   கனி



தொழிலாளர்   வாழ்வின்   துணைவன் ! கலைகள்
அழியாது   காத்த   அறிஞன் ! - மொழியை
விழியெனப்   போற்றிய   வீரராம்   ஜீவா
வழிநின்று   ஞாலத்தில்   வாழ்



கம்பனில்   தோய்ந்த   கனியமுது   பாரதி
தெம்பினில்   ஞானத்   தெளிவுறல் - வம்பெனில்
அம்பாய்ப்   பாய்ந்தே   அழிக்கின்ற   ஆற்றலால்
வம்பரும்   அஞ்சும்   வலி



உழைப்போர்   உயர   உழைக்கும்   உறவு !
அழைத்திடும்   ஏழையர்   அன்பன் - மழையாய்ப்
பொழியும்   தமிழின்   பொழிவு ! பொதுமை
வழிகின்ற   ஜீவா   வரம்



அருமைத்   தோழர் !   அறிவின்   அருவி !
பெருமை   நிறைந்த   பிறப்பு - பெருகும்
கருத்தில்   ஒளிரும்   கதிரவன்   ஜீவா
பொருப்பாய்ச்   செயல்பட்ட   பொன்

                                                                                          -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக