இராதே

இராதே
eradevadassou

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சாதீ

சாயம் போன
துணியானாலும்
இன்னும்
தைத்துப் போட்டுக்
கெடுத்துக் கொண்டிருக்கும்
சமூகச் சீரழிவுச்
சட்டை !

அடித்து
துவைத்து
துப்புரவு செய்ய
வேண்டிய
கரை படிந்த
அழுக்கு !

பரணை சமுக்காளத்தை
தட்டியதில்
கிளம்பிய நெடியாய்
துன்புறுத்தும்
ஒவ்வாமை !

சாணிப் பால்
குடிக்க வைத்து
தொண்டைக் குழியில்
குமட்டலாய் வந்த
வாந்தி !

சவுக்கடி
சரித்திரத்தை
வரிகளாய்
முதுகில் எழுதிய
வரலாறு !

தாகம்  தீர்க்காமல்
தவிக்க விட்டுவிட்டு
வியர்வை  வரவழைத்து
வேடிக்கைப்  பார்க்கும்
விக்கல் !

விலாசம்  தெரியாமல்
விரடியடித்து
இருட்டிப்பு
செய்ய வேண்டிய
சிக்கல் !

காதலைச்
சாம்பலாக்கிய
காட்டுத் தீ !

பிடரிப்  பிடித்து
தள்ளவேண்டிய
பித்தலாட்டம்
இதுதான்
சாதீ  !!
                                        - இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக