சின்ன கண்ணன்
( காவடிச் சிந்து )
( நண்பன் பொறிஞர் இரா.கண்ணன் 60 ஆவது அகவைத் தொடக்க நாள் 14.05 2026 ஒட்டி எழுதிய காவடிச் சிந்து)
சின்ன கண்ணன் தூயநட்பை நாடுவான் - அன்பில்
கூடுவான் - மகிழ்வு
தேடுவான் - பண்பின்
திளைப்போடே கேண்மைநோக்கி ஓடுவான் - பழகும்
தெளிவூறியே பலவேளைகள்
களிப்பூறிட களமாடிடும்
சீரழகு மீனா மணாளன் ! - நனிப்
பேரழுகுச் சூடுங் குணாளன் ! (1)
சின்ன கண்ணன் குறும்புசெயும் மாயங்கள் - புரளுந்
தாயங்கள் - மாறுஞ்
சாயங்கள் - பணிவு
செழிப்புறவே மனமாற்றும் காயங்கள் - அறிவு
திறமேவிட வளமாகியே
அறமேதவழ் சிறப்பேறிய
செப்பமுடை நண்பர்தமை ஆளுவான் ! - புகழ்த்
தெப்பத்திலே மயங்கிடாமல் மீளுவான்! (2)
இன்னல்தரு மாந்தருக்குக் கூற்றிவன் - புதிய
மாற்றிவன் - அரிய
நாற்றிவன் - நாளும்
இனிமைமிகப் பழகுதற்கு ஊற்றிவன் - துயர்
இடர்மாய்ந்திடுஞ் சுடரேயென
படர்ந்தாடிடும் விளக்காகியே
ஏற்றமிகுக் கட்டுங்கலைப் பொறிஞன் ! - தனி
ஆற்றலுடை நுட்பம்வளர் அறிஞன் ! (3)
எண்ணங்களில் தூயசிந்தைத் தேனவன் - துள்ளும்
மானவன் - ஒளிரும்
வானவன் - நேயம்
இன்பஞ்சூழும்
![]() |
உறவுமுறை ஆனவன் - என்றும்
ஈகையோடே இதயம்புக
வாகையோடே வலமும்வர
தப்பாமல் புன்சிரிப்பில் ஆழ்த்துவோம் ! - நாம்
எப்பவுமே பிறந்தநாளில் வாழ்த்துவோம் ! (4)
- இராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக