இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 22 நவம்பர், 2026

 பயணம்


ஆசை இறங்கும் நேரம்

   ஞானம் மனத்துள் ஏறும் ;

அடிகள் கொடுத்த வலிகள்

   அனுப  வங்கள் கூறும் !    ( ஆசை)


ஓசை யின்றி நாட்கள்

   ஓடி ஒளியக் கூடும் ;

உறவும் நட்பும் மெல்ல

   உதற வாய்ப்புத் தேடும் !     ( ஆசை) 


திராட்சை ரசமும் திகட்டும் ;

   தெளிவும் இருளை அகட்டும் ;

தேடும் பொருட்கள் யாவும்

   துறக்க மனமும் விரும்பும் ;

ஓடும் கால மெல்லாம்

   உணர்ந்தே நடையாய் அரும்பும் ;

ஆடும் வாழ்க்கை படகினி

   அழகுப் பயணம் போகும் !     ( ஆசை) - 1


தலையைத் துவட்டும் மனைவி ;

   அறிவை வழங்கும் பேரன் ;

இன்னும் இருக்கும் நட்பு

   இதயம் துளிர்க்கும் இன்பம் !

சொன்னச் சொல்லும் சுவைக்கும்

   சோகம் மறைந்தும் இனிக்கும் ;

என்ன இன்னும் வேண்டும்

   இவையே தொடர்ந்தால் போதும் !     ( ஆசை) - 2


கடந்து மறக்கும் கசப்பு

   காத்துக் கிடக்கும் அன்பு 

உசப்பும் மிச்ச வாழ்வு

   உயிர்ப்பில் மிளிர நாளும்

மௌனம் உடைக்க தோழா

   மகிழ்ச்சி சுரக்க வாடா

நிறைவு நிறைவு நிறைவே

   நின்ற கவலை மறைவே !      ( ஆசை) - 3


பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக