வந்ததுவே கோடை கோடை ! - வேர்வை
வழிந்திடக் கிழிந்திடுதே ஆடை ! - காய்ந்து
மண்டிடும்ம ணற்குவியல் மேடை ! - மாய்ந்த
ஓடை ! - நீரின்
பாடை !- குளிர்
மடிந்திடமு டிந்ததுவே வாடை !
சிந்துமிள நீர்ச்சுவையில் முங்கு ! - வேட்கைத்
தீர்த்துவிடும் மரமதுவே தெங்கு ! - பனை
சீர்தானே வெயிற்கால நுங்கு ! - நமக்
கிங்கு !- பெரும்
பங்கு ! - தரும்
சிலுசிலுப்பை என்றூது சங்கு !
கொட்டிடும் அருவியென வேர்வை ! - உடல்
குலைந்திடும் உழைப்பதிலே சோர்வைப் - போக்கக்
குடித்திடும் நீர்தானே தீர்வை - வெய்யோன்
பார்வை ! - வேண்டாம்
போர்வை ! - இனிக்
குளமாறு யேரிகளில் நீர்வை !
எட்டுங்க திர்வீச்சுகளோ செருகும் ! - தளி
ரிளம்பயிர் வகைகளோ கருகும் ! - உயி
ரினங்களும் தலைகாட்ட மறுகும் ! - அனல்
திருகும் ! - தனல்
பெருகும் ! - குளம்
ஏரிதண்ணீ ரைப்பரிதி பருகும் !
கத்திரியில் அனல்கூடி வறுக்கும் ! - கதிர்
கருணைமு கங்காட்டவே மறுக்கும் ! - வெயிற்
காய்வதினால் மக்களுளம் வெறுக்கும் ! - வேனில்
முறுக்கும் ! - இரவைக்
குறுக்கும் ! - வெப்பம்
கண்டபடி எகிறிதலை கிறுக்கும் !
புத்துணர்வு தருமிடங்கள் செல்லு ! - குளிர்
புழங்கும்ஊட் டியில்இடங் கொள்ளு ! - கடும்
புழுக்கத்தை மலைத்தளத்தில் வெல்லு ! - மகிழ்
உள்ளு ! - மனத்தில்
சொல்லு ! - கோடைப்
பொழுதினை வென்றோமெனத் துள்ளு !
-இராதே
வழிந்திடக் கிழிந்திடுதே ஆடை ! - காய்ந்து
மண்டிடும்ம ணற்குவியல் மேடை ! - மாய்ந்த
ஓடை ! - நீரின்
பாடை !- குளிர்
மடிந்திடமு டிந்ததுவே வாடை !
சிந்துமிள நீர்ச்சுவையில் முங்கு ! - வேட்கைத்
தீர்த்துவிடும் மரமதுவே தெங்கு ! - பனை
சீர்தானே வெயிற்கால நுங்கு ! - நமக்
கிங்கு !- பெரும்
பங்கு ! - தரும்
சிலுசிலுப்பை என்றூது சங்கு !
கொட்டிடும் அருவியென வேர்வை ! - உடல்
குலைந்திடும் உழைப்பதிலே சோர்வைப் - போக்கக்
குடித்திடும் நீர்தானே தீர்வை - வெய்யோன்
பார்வை ! - வேண்டாம்
போர்வை ! - இனிக்
குளமாறு யேரிகளில் நீர்வை !
எட்டுங்க திர்வீச்சுகளோ செருகும் ! - தளி
ரிளம்பயிர் வகைகளோ கருகும் ! - உயி
ரினங்களும் தலைகாட்ட மறுகும் ! - அனல்
திருகும் ! - தனல்
பெருகும் ! - குளம்
ஏரிதண்ணீ ரைப்பரிதி பருகும் !
கத்திரியில் அனல்கூடி வறுக்கும் ! - கதிர்
கருணைமு கங்காட்டவே மறுக்கும் ! - வெயிற்
காய்வதினால் மக்களுளம் வெறுக்கும் ! - வேனில்
முறுக்கும் ! - இரவைக்
குறுக்கும் ! - வெப்பம்
கண்டபடி எகிறிதலை கிறுக்கும் !
புத்துணர்வு தருமிடங்கள் செல்லு ! - குளிர்
புழங்கும்ஊட் டியில்இடங் கொள்ளு ! - கடும்
புழுக்கத்தை மலைத்தளத்தில் வெல்லு ! - மகிழ்
உள்ளு ! - மனத்தில்
சொல்லு ! - கோடைப்
பொழுதினை வென்றோமெனத் துள்ளு !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக