திக்கு முக்காடும் பிழைப்பு - தேர்தல்
தில்லு முல்லான உழைப்பு - கையில்
சில்லரையைச் சேர்த்துவிட்டுக்
கல்லரைக்குப் போகும்வரை
நடிப்பார் ! - காலைப்
பிடிப்பார் !
சொக்கத் தங்கமாய் ஒளிரும் - நாக்கு
சொல்லும் பொய்யாகி மிளிரும் - வாக்கு
சொல்லிச்சொல்லி ஏலம்விட்டு
அள்ளிஅள்ளி நாமம்போட்டு
ஏய்ப்பார் ! - குடி
சாய்ப்பார் !
வாய்க்கு வந்தபடி இளிப்பு - கொடை
வள்ள ளாகியே அளிப்பு - வீடு
மாடிப்படி யேறியேறித்
தேடிவழி யோடியன்பைப்
பொழிவார் ! - முகம்
வழிவார் !
வாய்மை யுள்ளார்போல் பேச்சு - சொன்ன
வாக்கோ கானல்நீ ராச்சு - பணம்
வாரிவாரி யேஇறைத்து
வாக்குகளைச் சேகரிக்க
வருவார் ! - பொருள்
தருவார் !
கூழைக் கும்பிடு போட்டு - குணம்
கொண்டார் போல்நையப் பாட்டு - பாடி
குள்ளநரி உள்ளத்தோடு
நல்லவராய் வேடமிட்டு
சிரிப்பார் ! - வாக்கைப்
பறிப்பார் !
ஏழை வீட்டுக்குள் நுழைந்தே - அன்பை
ஈணுந் தாய்போலக் குழைந்தே - பெரும்
ஈகையராய்க் கைகொடுத்தே
இன்முகமாய்ப் பாசத்தாலே
துடிப்பார் ! - கண்ணீர்
வடிப்பார் !
சாதிப் பேராசை யூட்டி - மத
சார்பின் வண்ணங்கள் தீட்டி - மூடத்
தாக்கங்களைத் தூண்டிவிட்டே
ஏக்கங்களைக் கூட்டிவிட்டுத்
தொழுவார் ! - காலில்
விழுவார் !
போதி புத்தர்போல் சிரிப்பு - மது
போதை ஏற்றிவலை விரிப்பு - போலி
புன்சிரிப்பைத் தந்துதந்து
தன்னலத்தில் முந்திநிற்க
முனைவார் ! - வேடம்
புனைவார் !
- இராதே
தில்லு முல்லான உழைப்பு - கையில்
சில்லரையைச் சேர்த்துவிட்டுக்
கல்லரைக்குப் போகும்வரை
நடிப்பார் ! - காலைப்
பிடிப்பார் !
சொக்கத் தங்கமாய் ஒளிரும் - நாக்கு
சொல்லும் பொய்யாகி மிளிரும் - வாக்கு
சொல்லிச்சொல்லி ஏலம்விட்டு
அள்ளிஅள்ளி நாமம்போட்டு
ஏய்ப்பார் ! - குடி
சாய்ப்பார் !
வாய்க்கு வந்தபடி இளிப்பு - கொடை
வள்ள ளாகியே அளிப்பு - வீடு
மாடிப்படி யேறியேறித்
தேடிவழி யோடியன்பைப்
பொழிவார் ! - முகம்
வழிவார் !
வாய்மை யுள்ளார்போல் பேச்சு - சொன்ன
வாக்கோ கானல்நீ ராச்சு - பணம்
வாரிவாரி யேஇறைத்து
வாக்குகளைச் சேகரிக்க
வருவார் ! - பொருள்
தருவார் !
கூழைக் கும்பிடு போட்டு - குணம்
கொண்டார் போல்நையப் பாட்டு - பாடி
குள்ளநரி உள்ளத்தோடு
நல்லவராய் வேடமிட்டு
சிரிப்பார் ! - வாக்கைப்
பறிப்பார் !
ஏழை வீட்டுக்குள் நுழைந்தே - அன்பை
ஈணுந் தாய்போலக் குழைந்தே - பெரும்
ஈகையராய்க் கைகொடுத்தே
இன்முகமாய்ப் பாசத்தாலே
துடிப்பார் ! - கண்ணீர்
வடிப்பார் !
சாதிப் பேராசை யூட்டி - மத
சார்பின் வண்ணங்கள் தீட்டி - மூடத்
தாக்கங்களைத் தூண்டிவிட்டே
ஏக்கங்களைக் கூட்டிவிட்டுத்
தொழுவார் ! - காலில்
விழுவார் !
போதி புத்தர்போல் சிரிப்பு - மது
போதை ஏற்றிவலை விரிப்பு - போலி
புன்சிரிப்பைத் தந்துதந்து
தன்னலத்தில் முந்திநிற்க
முனைவார் ! - வேடம்
புனைவார் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக