இராதே

இராதே
eradevadassou

சனி, 14 நவம்பர், 2020

 


நேரு மாமா







மாமா மாமா நேருமாமா
மாமா மாமா நேருமாமா

மொட்டுமலர் பிள்ளைகளை வட்டமிட்டு
சுத்தி சுத்தி கிட்டகிட்ட கொஞ்சியவர்
நேருமாமா

மொட்டுமலர் பிள்ளைகளை வட்டமிட்டு
சுத்திசுத்தி கிட்டகிட்ட கொஞ்சியவர்
நேருமாமா

தாவுங் குழந்தைகளகை யிலேந்தும்
நேருமாமா

மாமா மாமா நேருமாமா
மாமா மாமா நேருமாமா


சுட்டித் தனமழலையரின்
ஒட்டுறவில் நேசமுற்று கொஞ்சி கொஞ்சி
அன்புமழை
கொட்டுமாமா

சுட்டித் தனமழலையரின்
ஒட்டுறவில் நேசமுற்று கொஞ்சி கொஞ்சி
அன்புமழை கொட்டுமாமா

ரோஜா பட்டு மலர்சட்டையிலே
சூட்டும்மாமா

மாமா மாமா நேருமாமா
மாமா மாமா நேருமாமா


ஊரறிய உலகறிய இந்தியாவ நமக்கு
உள்ளவங்க நல்லவங்க மத்தியிலே
ஒன்னாகி
ஆகா
ஒன்னாகி உறவுமுறை கொண்டாடி
தன்னாலே முன்னேற வழிசொன்ன
நேருமாமா

இந்த வளர்ச்சி தந்த உத்தமரு
நேருமாமா

மாமா மாமா நேருமாமா
மாமா மாமா நேருமாமா


உலகேற்க பஞ்சசீல கொள்கைகள ஊன்றி
உண்மைகள வகுத்துதரும் பண்புகள
ஜாடைகாட்டி
ஓகோ
அறிவுஊட்டி
ஆகா
ஜாடைகாட்டி அறிவுஊட்டி நல்லுறவு
கூட்டம் கூட்டி
நல்லபேரு வாங்கிதந்த நேருமாமா
நம்ம ஆசியாவின் சோதி எங்க
நேருமாமா

மாமா மாமா நேருமாமா
மாமா மாமா நேருமாமா
- இராதே

வியாழன், 12 நவம்பர், 2020

 தாய்ப்பால்

(உருப்படி)

எடுப்பு

தாய்ப்பால் கொடுத்திட பழகு - மழலை
தளிர்மேனி வளரும்பார் அழகு (தாய்)


தொடுப்பு

தாய்ப்பால் தரும்ஊட்டம் எதிர்ப்பாற்றல் தந்திடும்
தாயன்பு மொழிப்பண்பு தழைப்பதில் முந்திடும் (தாய்)


முடிப்பு

எளிதிலே செரிமானம் ஆகும் - தாய்ப்பால்
ஏற்றமுறுங் கட்டுடலாய் தேறும் - நோஞ்சான்
கொழுகொழு குழந்தையாய் மாறும் - பார்க்க
மொழுமொழு செழிப்பழகே ஊறும் (தாய்)


அறிவுவளம் உரமாகித் தேடும் - நல்ல
ஆளுமையும் தோற்றமுமே கூடும் - தாய்க்குச்
சிறப்பான நற்பெயரைச் சூடும் - வாழ்வில்
சீர்மேவும் நன்மைபல நாடும் (தாய்)

- இராதே
Image may contain: 1 person, sitting




 இடை பத்து

(வெண்பா)


மெல்லிடையில் மெல்லமெல்ல மேய்ந்து விளையாடி
நல்லிடைதான் என்றெனுக்கு நன்காய்ந்து - சொல்வாயோ
என்றிருந்தேன் இன்றுவரை இல்லை விடைஒன்றும்
தென்றலே ஏன்தயக்கம் செப்பு (1)



உரலோ ? துடியோ ? ஒளிமின்னல் கீற்றோ ?
சரம்வீழ் மணற்கடிகை தானோ ? - உரசிடுந்
தென்றல் உலவித் திரியும் கொடிநாணோ ?
என்னென்பேன் உந்தன் இடை (2)



இடைதான் இருக்கிறதா ? இங்கே , மலைத்து
விடைதான் காணா வினாக்கள் - மடைபோல்
பொழிந்திடும் பாற்குடங்கள் பொல்லா எடையின்
செழிப்பால் இடைஉடையும் செப்பு (3)



முந்தானை ஏனுனக்கு முன்கோபம் மூடுகிறாய் ?
நந்திபோல் மறைத்து நாணுகிறாய் ! - முந்திவருந்
தென்றல் தருமுத்தம் தீண்டாதோ ? ஏக்கத்தில்
எண்ணி சிலிர்க்கும் இடுப்பு (4)



தென்றல் நகர்ந்தூரும் சிற்றெறும்புச் சென்றூரும்
குன்றா அழகூரும் கூன்பிறை - என்றே
முறுக்கி வளைந்தூரும் மென்விரல்கள் ஆள
இறுக்க இடரும் இடை (5)



சடையின் அசைவில் சரியும் உடையில்
நடையின் ஒழுங்கில் நடன - அடைவில்
கடைக்கண் அகல கவரும் மடிப்பின்
இடையில் உலவும் எழில் (6)



சுற்றுங் கொடியில் சுவைக்கும் இளநீர்கள்
இற்று விழுமோ ? இடிபடுமோ ? - பற்றியே
நின்றுளம் பந்தடிக்கும் நேர்த்தியினை என்னவென்றே
சின்ன இடைநீ செப்பு (7)



மாலைவருந் தென்றல் மயங்கி நுழைந்திட
சேலைத் தலைப்போ சிணுங்கும் - வேளை,
மடிப்பின் துடிப்பில் மனமோ கசங்க
நடிக்கும் இடையின் நகை (8)



வளைவில் வளையா மனதும் வழுக்கும்
கிளைவிடும் இன்பந் துளைக்கத் - திளைக்க
மலைக்க மலைக்க மதியும் மருள
இளைத்தே இழுக்கும் இடை (9)



சிக்கெனப் பற்றினேன் சிக்கனச் சிற்றிடைச்
சொக்கும் பொடியிட சொக்கவே - வைக்கும்
அழகை இடைபத்தாய் ஆக்கினேன் வெண்பா
இழைத்தேன் வடித்தேன் இடை (10)


-இராதே





திங்கள், 26 அக்டோபர், 2020

                                              பூசணி புலம்பல்

( உருப்படி )

எடுப்பு

நான் என்ன தீமை செய்தேன் ? - மனிதா
நான் என்ன தீமை செய்தேன் (நான்)

தொடுப்பு

ஏன் என்னை எடுத்துத் தரையில் மோதி
மாளவே மண்ணில் மண்டை உடைத்தாய் ? (நான்)

முடிப்பு

பச்சை கறிகாயாய் உணவில் சேர்ந்ததா ?
பதமாய்ச் சுவைத்திடும் ' அல்வா'வாய் ஆனதா ?
மெச்சும் பூசணிப் பூவைத் தந்ததா ?
மேனிப் பயனுற சாறாய்ப் போனதா ? (நான்)


கண்ணேறுக் கழிக்க வாசலில் கட்டினாய் !
காக்கையை விரட்ட பொம்மையாய் நாட்டினாய் !
மண்புவி சாலையில் உடைத்தே கொட்டினாய் !
மனத்திடை நன்றியைச் சொல்லாமல் பூட்டினாய் ! (நான்)


வீணான மூளையின் மூடப் பழக்கத்தால்
வீதியில் எனைவீசி வழக்கிடச் செய்தாயே !
ஆனான இன்னுயிர் 'அம்போ'னு போகுதே !
ஆகாத செயலினை அடியோடு செய்யாதே ! (நான்)

- இராதே





சனி, 10 அக்டோபர், 2020

            உருப்படி

( வஞ்சி வந்தனளே - மலைகுற )

எடுப்பு

சிந்து பாடினனே !- மனமகிழ்
சிந்து பாடினனே ! ( சிந்து )

தொடுப்பு

சிந்தை நடமிடு முந்தை மனமொழி
விந்தை எழுமதி வந்து முழவிட
சிந்தும் எழிலிசை உந்துங் கனவினில்
சந்தம் அழகுற முந்தும் நினைவொடு ( சிந்து )


முடிப்பு

கொஞ்சுந் தமிழிசை மஞ்சம் புகுந்திட
பஞ்ச ணையினிடை ஊடவே
மஞ்சு மிதந்திடும் பஞ்சு மொழியவள்
கெஞ்சும் இளநகை சூடவே
தஞ்சம் அருளிடும் விஞ்சுந் தமிழ்மொழி
மிஞ்சும் சிறப்பினை நாடவே
துஞ்சுந் தமிழரின் நெஞ்சம் எழுந்திட
அஞ்சும் நிகழ்வுகள் மங்க மனமகிழ் ( சிந்து )


திங்கள் ஒளிமழை அங்கி யெனவிழ
வங்க நிறைகடல் பொங்கி அலையெழ
மங்கை இதழ்வழி முங்கி யெழும்பிடுந்
தெங்கின் சுவையுடன் சங்க வளர்த்தமிழ்
சங்கம் முழங்கிடும் துங்க இசையுற
எங்கள் மொழிதமிழ் சிங்க நடையுடன்
எங்கும் நடந்திடும் தொங்கல் ஒலியுடன்
தங்குந் தமிழ்மொழி தங்க மனமகிழ் ( சிந்து )

- இராதே

(அங்கி : உடை , துங்க : தூய்மை , தெங்கு : தித்திப்பு )

Watch Again
Share



சனி, 3 அக்டோபர், 2020

                        மழை

( காவடிச் சிந்து)

பல்கும்நீர் அலைவுற முகில்தர
பாய்வுற வான்பொழி மாமழையே !
பஞ்சம்தான் இனியிலை எனும்நிலையே !
பரவவுந் தூவிடும் நீரிழையே !
பருவதண் ணீர்தரு நீர்த்துளியே !
அருகும்நீர் பொங்கிட வா வெளியே !
பங்கின்பொருந் தும்புனல்தங்
குஞ்சிறுகண் ணும்இனமும்
பந்தி விருந்திடும் வருவாயே !

அல்லல்தீர் வுஉருபெ றநீர்வழி
ஆறுகள் நிறைவுற பெய்திடுவாய் !
ஆழ்ஏரி மதகுகள் நீரேறி
அருவுறும் வறுமையை மாய்த்திடுவாய் !
அரங்கணி நீர்வளம் தேங்கிடுமே !
மரமொளிர் பசுமையும் ஓங்கிடுமே !
அன்னங்களும் வண்டினமும்
கண்கவரும் இன்பமென்றுன்
அன்பி னழைப்பொடு வருவாயே !

விண்ணில்பே ரிடியுமு டன்அலை
மின்ன லெழுதிடும் தூரிகையாம் !
விஞ்சும்பே ரழகுடன் நடம்புரி
வேகமுகி லாலணையும் காரிகையாம் !
விளைபயிர் உயிர்பெற வீழுமூற்றே !
மிகமிகும் அறுவடை ஈணும்சாற்றே !
விண்ணுதிரும் பொன்விளையும்
கண்டுவிருந் துண்ணுதல்முன்
விந்தை அறத்தினள் வெளிவாராய் !

- இராதே