விண்ணிருந் துமண்ணில் தூவுதே !
பருவமழை
பயிர்வளர்செய்
விந்தை யுடன்வயல் மேவுதே ! - வெல்லும்
மின்னொலிமலர் வண்ணமேசுடர்
சொன்னமேயென முன்னமேவளர்
மென்விளை வைஈனும் மழையே !
பெருவிளைச்சல்
தனைவிளைக்க
வில்லையெ னில்பெரும் பிழையே !
மன்மதன் கைக்கணை சரமாம் !
அதிவிரைவில்
பரவிவிழ
மண்வளத் தைப்பேணும் வரமாம் ! - பொங்கி
வந்தநீர்நிலை நின்றுமேலெழ
உந்துசேர்வழி அண்டிசேர்ந்துழ
வயல்வழி யநீரின் வரவே !
நனையநிலம்
முளைபயிர்கள்
வளர்வது வும்இயற்கை உறவே !
தண்ணீரோ டவாய்க்கால் காணுதே !
வழிநெடுக்க
தனைமறைத்தும்
தங்குமி டம்நாடி பூணுதே ! - தூர்ந்த
தன்நிலைவழி மண்ணெடுத்திட
சென்றுசேர்கையில் உண்டநீர்நிலை
தன்னிறை வில்பாடல் பாடுதே !
அலையெழும்பிக்
கரைபுரள
'தந்தனத் தோம்'தாளம் போடுதே !
புன்னகையாய் வெள்ளம் பாயுதே !
மனமகிழ்வில்
தினநெகிழ
பூரிப்பி லேஉள்ளம் சாயுதே ! - வந்த
பெண்ணிணைகுயில் வண்ணமாமயில்
மண்ணிலேவிழும் சின்னப்பூவிதழ்
பூப்படைந் தேநெஞ்சம் மீட்டுதே !
மழைப்பருவம்
மயங்கித்தொழப்
புத்துணர் வில்இன்பங் கூட்டுதே !
- இராதே
பருவமழை
பயிர்வளர்செய்
விந்தை யுடன்வயல் மேவுதே ! - வெல்லும்
மின்னொலிமலர் வண்ணமேசுடர்
சொன்னமேயென முன்னமேவளர்
மென்விளை வைஈனும் மழையே !
பெருவிளைச்சல்
தனைவிளைக்க
வில்லையெ னில்பெரும் பிழையே !
மன்மதன் கைக்கணை சரமாம் !
அதிவிரைவில்
பரவிவிழ
மண்வளத் தைப்பேணும் வரமாம் ! - பொங்கி
வந்தநீர்நிலை நின்றுமேலெழ
உந்துசேர்வழி அண்டிசேர்ந்துழ
வயல்வழி யநீரின் வரவே !
நனையநிலம்
முளைபயிர்கள்
வளர்வது வும்இயற்கை உறவே !
தண்ணீரோ டவாய்க்கால் காணுதே !
வழிநெடுக்க
தனைமறைத்தும்
தங்குமி டம்நாடி பூணுதே ! - தூர்ந்த
தன்நிலைவழி மண்ணெடுத்திட
சென்றுசேர்கையில் உண்டநீர்நிலை
தன்னிறை வில்பாடல் பாடுதே !
அலையெழும்பிக்
கரைபுரள
'தந்தனத் தோம்'தாளம் போடுதே !
புன்னகையாய் வெள்ளம் பாயுதே !
மனமகிழ்வில்
தினநெகிழ
பூரிப்பி லேஉள்ளம் சாயுதே ! - வந்த
பெண்ணிணைகுயில் வண்ணமாமயில்
மண்ணிலேவிழும் சின்னப்பூவிதழ்
பூப்படைந் தேநெஞ்சம் மீட்டுதே !
மழைப்பருவம்
மயங்கித்தொழப்
புத்துணர் வில்இன்பங் கூட்டுதே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக