அறியாமை இருள்போக்கி
அறிவதனை விரிவாக்க
அன்றாடம் பூக்கும் சோலை ;
அறிஞரெனப் பொறிஞரென
ஆய்வுகள் பலதொடர
அறிவுக்கண் திறக்கும் சோலை ;
செறிவுடைய நூற்கற்க
செழித்தெழும் மூளையதன்
செயல்களைத் தூண்டும் சாலை ;
செல்லுமிடம் புகழ்காண
செம்மாந்த நிலைக்காண
செய்தவம் நூற்கும் சாலை ;
நெறியுடைய கல்வியை
நீள்கின்ற வாசிப்பை
நித்தமும் வழங்கும் இடமே !
நேசமிகும் ஆசானாய்
நெருங்கிய நண்பனாய்
நின்றறிவு கூட்டும் தடமே !
பொறிகளைத் தட்டிடும்
பொன்னேட்டுத் தொகுப்புகள்
பொலிவோடு காக்கும் சாலை ;
பொதுவறிவு மேன்மேயுற
புலன்களின் தேடலில்
புதியன கிட்டும் சாலை ;
குறிப்புகள் மலையளவு
கொண்டபல நூல்களின்
குவியலில் தொடுக்கும் ஆரம் ;
கூர்மையாய் நினைவாற்றல்
கொண்டதொரு சிந்தையைக்
கொடுத்திடும் வேள்விச் சாரம் ;
தெறிப்புறும் வினாக்களைத்
திகைப்புறும் விடைகளைத்
தேடிட காணும் இடமே !
தெளிவுகள் பிறந்திட
தேவைகள் அறிந்திட
தேறுதல் கூறும் தடமே !
நூண்ணறிவு துலங்கிட
நுட்பங்கள விளங்கிட
நூல்களின் துணையைக் கொள்வோம் ;
நொடிதோறும் பயின்றிட
நோக்கங்கள் வென்றிட
நூற்றவம் இயற்றி வெல்வோம் ;
மண்டிடும் நூலறிவு
மாசற்ற புரிதல்கள்
மனத்திலே இருத்தி வைப்போம் ;
மாண்புறும் நூற்கலை
மதிப்புடன் போற்றிட
மங்காமல் ஒளிர்ந்து நிற்போம் ;
கண்டிடும் செல்வங்கள்
கண்டிடும் உயர்நிலை
கண்டிடும் நாளும் நலமே !
கற்றிட நூற்களைக்
கற்றிடும் பழக்கத்தால்
கவலைகள் ஓடும் தலமே !
-இராதே
அறிவதனை விரிவாக்க
அன்றாடம் பூக்கும் சோலை ;
அறிஞரெனப் பொறிஞரென
ஆய்வுகள் பலதொடர
அறிவுக்கண் திறக்கும் சோலை ;
செறிவுடைய நூற்கற்க
செழித்தெழும் மூளையதன்
செயல்களைத் தூண்டும் சாலை ;
செல்லுமிடம் புகழ்காண
செம்மாந்த நிலைக்காண
செய்தவம் நூற்கும் சாலை ;
நெறியுடைய கல்வியை
நீள்கின்ற வாசிப்பை
நித்தமும் வழங்கும் இடமே !
நேசமிகும் ஆசானாய்
நெருங்கிய நண்பனாய்
நின்றறிவு கூட்டும் தடமே !
பொறிகளைத் தட்டிடும்
பொன்னேட்டுத் தொகுப்புகள்
பொலிவோடு காக்கும் சாலை ;
பொதுவறிவு மேன்மேயுற
புலன்களின் தேடலில்
புதியன கிட்டும் சாலை ;
குறிப்புகள் மலையளவு
கொண்டபல நூல்களின்
குவியலில் தொடுக்கும் ஆரம் ;
கூர்மையாய் நினைவாற்றல்
கொண்டதொரு சிந்தையைக்
கொடுத்திடும் வேள்விச் சாரம் ;
தெறிப்புறும் வினாக்களைத்
திகைப்புறும் விடைகளைத்
தேடிட காணும் இடமே !
தெளிவுகள் பிறந்திட
தேவைகள் அறிந்திட
தேறுதல் கூறும் தடமே !
நூண்ணறிவு துலங்கிட
நுட்பங்கள விளங்கிட
நூல்களின் துணையைக் கொள்வோம் ;
நொடிதோறும் பயின்றிட
நோக்கங்கள் வென்றிட
நூற்றவம் இயற்றி வெல்வோம் ;
மண்டிடும் நூலறிவு
மாசற்ற புரிதல்கள்
மனத்திலே இருத்தி வைப்போம் ;
மாண்புறும் நூற்கலை
மதிப்புடன் போற்றிட
மங்காமல் ஒளிர்ந்து நிற்போம் ;
கண்டிடும் செல்வங்கள்
கண்டிடும் உயர்நிலை
கண்டிடும் நாளும் நலமே !
கற்றிட நூற்களைக்
கற்றிடும் பழக்கத்தால்
கவலைகள் ஓடும் தலமே !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக