சடுகுடு
பிடிபிடி பிடிபிடி மெதுவாக
பிடிக்கப் பூனை எலிவேட்டை ;
குடுகுடு குடுகுடு எலியோட
குதித்த பூனை பாய்ந்ததுவாம் ;
சடுகுடு சடுகுடு ஆட்டமாம்
சமையல் கட்டில் ஓட்டமாம் ;
டமடம டமடம எழுமோசை
பாத்திரம் , பண்டம் உருளுதாம் ;
இடிஇடி இடிஇடி ஓசைபட
எழுந்த வீட்டினர் திரண்டுவர
தடியொடு தடியொடு துரத்தினராம்
தாவி இரண்டும் ஓடினவாம் ;
அடிபட அடிபட கூடாதென
அச்சத்தில் சந்தில் மறைந்தனவாம் ;
பிடிபட பிடிபட வில்லையாம்
வீட்டினர் கண்டதோ தொல்லையாம் !
- பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக