இராதே

இராதே
eradevadassou

வியாழன், 26 நவம்பர், 2026

பானை

 பானை


பானை பானை

    மண்பானை ;

பருகும் குடிநீர்

    வைக்கும் பனை ;

பாலும் சோறும்

    உலையி லெழ

பொங்கி வழியும்

    பொங்கப் பானை ;

பதமாய்க் குளநீர்

    மொண்டு வர

பாவையர் இடுப்பில்

    அமரும் பானை ;

பக்கா சூரனின்

    தொப்பை பானை ;

பனங்கொட்டைத் தலையன்

    வழுக்கை பானை ;

பகரும் சித்தர்

    தோண்டி பானை ;

படங்கள் வரைந்த

    வண்ண பானை ;

பானையும் சட்டியும்

    மோதிக் கிட்டா

பட்டென உடையும்

    சட்டி பானை !


      - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக