நல்லதைச் சொன்னேன் !
ஊருக்குநான் நல்லதைச் சொன்னேன்
உள்ளதைநான் உரக்கச் சொன்னேன் ;
பேருக்குத்தான் கேட்டு வைச்சாங்க;
பேசும்வாயைப் பூட்டி வைச்சாங்க ! ( ஊருக்கு)
ஊருக்குள்ளே கேட்கணுமாம்
உண்மைதனைச் சொல்வதற்கு ?
யாரையெண்ணிப் பார்க்கணுமாம்
உள்ளக்கதை சொல்வதற்கு ? ( ஊருக்கு )
நெல்லுக் குள்ளே சோறிருக்கும்
நெஞ்சிக் குள்ளே நஞ்சுமிருக்கும்
வஞ்சத்தைத் தான் மறைச்சி வைச்சா
வாழ்வில் லென்ன மிஞ்சியிருக்கும் ? ( ஊருக்கு ) 1
ஆணுக் குள்ளே பெண்ணிருக்கா
பெண்ணுக் குள்ளே ஆணிருக்கான்
பூத்தாடும் உறவுக் குள்ளே
பூடகமாய்ப் பகையிருக்கே ? ( ஊருக்கு ) 2
நட்புக் குள்ளே கற்பிருக்கே
கற்பு யெனும் நெருப்பிருக்கே
உறவாடி அதை அணைச்சா
உள்ளுக் குள்ளே வலியிருக்கே ? ( ஊருக்கு ) 3
கண்ணுக் குள்ளே நீருரிக்கே
கட்டி அழ யாரிருக்கா ?
மண்ணுக் குள்ளே போகுமுன்னே
மானஞ் சொல்லும் வாழ்விருக்கே ! ( ஊருக்கு ) 4
உனக்குள்ளே மானமிருக்கே
உணர்ந்தெழ ஞானமிருக்கே
நடந்த தெண்ணி வருந்திக்கணும்
நாளும் நம்மைத் திருத்திக்கணும் ! ( ஊருக்கு ) 5
- பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக