கைகளை
மணற்கடிகையாக்கி
காத்திருந்தேன்
கடற்கரையில்
அடிக்கடி
காலைத் தொட்ட
அலைகள்
வந்து விட்டாளா ?
எனக் கேட்டுச் சென்றது
மணித்துளிகளுக்கும்
நொடிப் பொழுதுகளுக்கும்
அப்போது தான்
அர்த்தம் தெரிந்து கொண்டேன்
அடடா என்ன சுகம் !
கொட்டாங்குச்சியின்
ஆழத்தை
குச்சியால் அளந்து
கண்டுகொண்டேன் ;
குளத்தின் ஆழத்தை
மூச்சடைத்து மூழ்கி
அறிந்துகொண்டேன் ;
உன் மனசின்
ஆழத்தை
அளக்க முடியாமல்
தோற்றுப் போனேன் !
உன் துப்பட்டாவில்
முடிச்சுப் போட்டு
பின்னால் விட்டிருக்கிறாய்
தொங்கிக்கொண்டிருக்கிறது
என் மனசு !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக