துளிப்பா -9
1. துளிர்க்கும் கண்ணீர்
துகில் உரிக்கும்
வெங்காயம்
2. சல்லடையில் சலிக்கும்
தண்ணீர்
ஓ. . . பனிக்கட்டி
3. இறந்த பின்வாழ்வு
இருவர் விழிகளில்
''விழிக் கொடை''
4. கோழி மிதித்து
குஞ்சு முடம்
''சுனாமி''
5. விரலின் பிரசவம்
விடைபெறும் பிறைநிலா
நகம்
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக