அன்னை வடிவே ஆருயிரே !
அன்புத் தவழும் பேருருவே !
அமைதி ஊற்றே அருந்தவமே !
அண்டம் காக்கும் அருட்சுடரே !
முன்னம் பழுத்த முதிர்ப்பழமே !
முதன்மைச் சேவை பெட்டகமே !
முதியோர் வாழ்வின் ஒளிவிளக்கே !
முரண்க ளில்லா முத்தொளியே !
கன்னம் சிவக்கும் சிரிப்பழகே !
கருணை மழையின் கார்முகிலே !
காலம் திணற உழைத்தவரே !
கனிவைச் சுட்டும் முகவரியே !
மின்னற் கொடியே மென்சிரிப்பே !
மேன்மைத் தொண்டின் அருஞ்சுவையே !
மெழுகின் ஈகை குணக்கடலே !
மேவியப் பொறுமை பெருமலையே !
தன்னம் பிக்கைக் களஞ்சியமே !
தட்டுக தட்டுக சப்பாணி !
தயவின் பொருளே தெரெசாவே
தட்டுக தட்டுக சப்பாணி !
- இராதே
viththiyaasamaana pyanuLLa sappaaNi :-)
பதிலளிநீக்கு