1. விழிப்புணர்வு இல்லா ஆச் சந்தை
விழிக்கொடையைத் தரமறுப்போர் மந்தை
அழியுமுடல் கண்ணெடுத்தே
அவையிருவர் வாழ்வொளிர
மொழிவதுவோ கண்தான விந்தை
2.பெண்ணினத்தின் இடஒதுக்குச் சட்டம்
பெண்களுக்கேன் இடைமறிக்கத் திட்டம்?
அன்பொழுகும் அரசியலார்
அரங்கேற்றும் நாடகத்தின்
பண்புகளோ பாதாளம் மட்டம்
3.தொலைக்காட்சித் தொடர்களின் ஆட்சி
தொலைந்திடுமே பெண்குலத்தின் மாட்சி
வலைப்போட்டு மங்கையரை
தலையுள்ள முண்டமாக்கும்
நிலையெண்ணி வருந்தும்மன சாட்சி
4.ஏரிக்குள் வேளாண்மைப் பாரு
உரியநீரைச் சேர்க்காத ஊரு
மாரிநீரைத் தேக்காமல்
மடக்காமல் வீணடித்தால்
நீர்நிலைகள் நிலைபெறுமா கூறு ?
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக