புயலாய் . . .
உன் மீது கொண்ட
பொறாமையால்
பொறுமையிழந்த
தென்றல்
மையம் கொண்டுள்ளது
வங்கக் கடலில்
புயலாய் . . .
தாழ்வு மனப்பான்மையில்
தவிக்கிறது
குறைந்த காற்றழுத்த
மண்டலமாய் . . .
வெட்கத்தால்
கரையேற மறுத்து
கண்ணீரை
பொழிகிறது
மழையாய் . . .
நீ சிரித்து
சமாதானப் படுத்தியதில்
பலவீனமடைந்து
மறைந்து போகிறது !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக