வங்கத் திரைக்கடல் ஓரம் - வாழும்
வண்ணத் தமிழரின் வீரம் - கொட்டும்
மொழியின்மழை பொழியும்வரை
எழிலின்உரை பெருகுந்தமிழ்க் கூறும்
நாளும் ஊறும் ! ( 1 )
திங்கள் ஒளிக்கதிர் பாயும் - வானில்
சித்திர விண்மீன்கள் மேயும் - பச்சைப்
படருங்கொடி நனையும்படி
தொடரும்படி குளிரும்வளி வீசும்
தமிழ் பேசும் ! ( 2 )
பொங்குந் தமிழர்கள் பாசம் - இங்கே
போதை தருந்தமிழ் வாசம் - சொட்டும்
நறையின்சுவை உணரும்வரை
நிறையும்வினை அறியும்மொழி கூடும்
உற வாடும் ! ( 3 )
சங்கத் தமிழ்வளர் கூடு - உயர்
தமிழொ ளிபூத்த வீடு - அவர்
உழைக்குங்குடி உழைத்தோங்கிட
பிழைக்கும்படி நிலைகூறிய சொந்தம்
தமிழ்ச் சந்தம் ! ( 4 )
தங்கும் இயற்கையைப் பாடி - வாணி
தாசன் மகிழ்தானே கூடி - நனி
எழிலோவியம் தரும்பாவியம்
பொழிலாமது பெரும்ஓவியந் தீட்டும்
புகழ் மீட்டும் ! ( 5 )
எங்குமே பாவேந்தர் பாட்டு - வீர
எழுச்சி உணர்வினில் கேட்டு - கன்னித்
தமிழ்மேவிட புவிமீதினில்
அமிழ்தாங்கவி சுவையுறுநீ ரூற்று
ஒளிக் கீற்று ! ( 6 )
பங்கயத் தேன்தமிழ் வாடை - சிந்து
பாரதி பாடிய மேடை - அவன்
புரட்சிச்சுனை வழிந்தோடிய
திரட்சிக்கொள நலங்கூடிடும் ஏரி
புதுச் சேரி ! ( 7 )
இங்குச் சூழுங்கவிக் கூட்டம் - பாடல்
எல்லோரும் கற்றிட நாட்டம் - இந்தப்
புதுவைதனில் உயர்வாழ்வதில்
பொதுமைநிலை சிறந்தோங்குதல் அருமை
மிக்க பெருமை ! ( 8 )
-இராதே
வண்ணத் தமிழரின் வீரம் - கொட்டும்
மொழியின்மழை பொழியும்வரை
எழிலின்உரை பெருகுந்தமிழ்க் கூறும்
நாளும் ஊறும் ! ( 1 )
திங்கள் ஒளிக்கதிர் பாயும் - வானில்
சித்திர விண்மீன்கள் மேயும் - பச்சைப்
படருங்கொடி நனையும்படி
தொடரும்படி குளிரும்வளி வீசும்
தமிழ் பேசும் ! ( 2 )
பொங்குந் தமிழர்கள் பாசம் - இங்கே
போதை தருந்தமிழ் வாசம் - சொட்டும்
நறையின்சுவை உணரும்வரை
நிறையும்வினை அறியும்மொழி கூடும்
உற வாடும் ! ( 3 )
சங்கத் தமிழ்வளர் கூடு - உயர்
தமிழொ ளிபூத்த வீடு - அவர்
உழைக்குங்குடி உழைத்தோங்கிட
பிழைக்கும்படி நிலைகூறிய சொந்தம்
தமிழ்ச் சந்தம் ! ( 4 )
தங்கும் இயற்கையைப் பாடி - வாணி
தாசன் மகிழ்தானே கூடி - நனி
எழிலோவியம் தரும்பாவியம்
பொழிலாமது பெரும்ஓவியந் தீட்டும்
புகழ் மீட்டும் ! ( 5 )
எங்குமே பாவேந்தர் பாட்டு - வீர
எழுச்சி உணர்வினில் கேட்டு - கன்னித்
தமிழ்மேவிட புவிமீதினில்
அமிழ்தாங்கவி சுவையுறுநீ ரூற்று
ஒளிக் கீற்று ! ( 6 )
பங்கயத் தேன்தமிழ் வாடை - சிந்து
பாரதி பாடிய மேடை - அவன்
புரட்சிச்சுனை வழிந்தோடிய
திரட்சிக்கொள நலங்கூடிடும் ஏரி
புதுச் சேரி ! ( 7 )
இங்குச் சூழுங்கவிக் கூட்டம் - பாடல்
எல்லோரும் கற்றிட நாட்டம் - இந்தப்
புதுவைதனில் உயர்வாழ்வதில்
பொதுமைநிலை சிறந்தோங்குதல் அருமை
மிக்க பெருமை ! ( 8 )
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக