சொல்லு ! சொல்லு !
சொல்லு ! சொல்லு !
சொல்லு ! சொல்லு !
உண்மையைச் சொல்லு !
உண்மையைச் சொல்லு ! ( சொல்லு )
சொல்லுறது வலிக்குமா ?
சோகத்தைத்தான் திணிக்குமா ?
நல்லதையும் கெட்டதையும்
நாடறிந்த மொத்தத்தையும் ( சொல்லு )
புத்தனா ? இல்லை சித்தனா ?
முத்திப்போன பித்தனா ?
எத்தனையோ கதையிருக்கே
எந்த கதையைச் சொல்லுறது ! ( சொல்லு ) - 1
பூவுக் குள்ளே தேனிருக்கும்
பூநாகம் மறைஞ்சிருக்கும்
நாவுக் குள்ளே சொல்லிருக்கும்
நஞ்சுந் தேனும் கலந்திருக்கும் ! ( சொல்லு ) - 2
கண்ணுக் குள்ளே பெண்ணிருக்கும்
பெண்ணு மேலே கண்ணிருக்கும்
ஒன்னுக் குள்ளே ஒன்னிருக்கும்
உரசிப் பாரு பொய்யிருக்கும் ! ( சொல்லு ) - 3
பாம்பைப் போலே சீறுறான்
பணத்தைப் பார்த்து மாறுறான்
பல்லிளிச்சி வால் பிடிச்சுப்
பதவி சுகங் காணுறான் ! ( சொல்லு ) - 4
பானைக் குள்ளே யானையா ?
பதுங்கி நிக்கும் பூனையா ?
உள்ளக் குள்ளே ஞானமா ?
ஓங்கி நிக்கும் ஊனமா ? ( சொல்லு ) - 5
- பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக