மழை !
மழையே மழையே - நீ எங்கே ? மறந்துப் போனாய் - வர இங்கே ? (மழை)
கரையைச் சேரும் நுரையெங்கே ? நுரையில் பொங்கும் சுழலெங்கே ? சுழலில் துள்ளும் மீனெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே ! ( மழை ) - 1
பச்சைப் பசுமை பயிரெங்கே ? பயிர்கள் தருகிற விளைச்சலெங்கே ? விளையா திருந்தால் உயிர்களெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே ! ( மழை ) - 2
புலிகள் யானைகள் நீர்த்தேடும் ; குடிக்க வழியின்றி ஊர்த்தேடும் ; ஊரே மிரண்டு அரண்டோடும் ; நீர்இருந் தாலிவை மாறிவிடும் ! ( மழை ) - 3
மரங்கள் வெட்டியப் பெருங்கோபம் மனத்தில் ஆறாக் காயங்களா ? மறுபடி மரங்கள் நாட்டிடுவோம் மாறாக் காயம் ஆறாதா ? ( மழை ) - 4
மழையே மழையே வா ! வா ! வா ! மண்ணுயிர்க் காக்க வா ! வா ! வா ! மறுத லிக்காமல் மனமிறங்கு மக்கள் வாழப் பொழிந்துவிடு ! ( மழை ) - 5
பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக