மாற்றம்
மாற்றமில்லை ஏதும் மாறவில்லை
மாறுதலும் பேராறுதலும் தர
யாருமில்லை - இனி
யாருமில்லை ! ( மாற்றம் )
காற்றில் தூய்மை காணவில்லை ;
சுவாச நோயுக்குப் பஞ்சமில்லை ;
ஆற்றில் கழிவுகள் பெருந்தொல்லை ;
தொடர்ந்தால் நீரும் சோறுமில்லை ! ( மாற்றம் ) - 1
குப்பைக் கூளங்கள் வெளியில்விழும் ;
விழுகிற போதே சண்டையெழும் ;
சாக்கடை நாற்றத்தில் தெருக்கள்அழும் ;
சரிசரி யென்றே கொசுக்கள் தொழும் ! ( மாற்றம் ) - 2
தொற்றும் பிணிகள் நின்றாடும் ;
சூழலைக் கெடுத்துக் கொண்டாடும் ;
முற்றுஞ் சுத்தம் இல்லையெனில்
ஊரே எரிக்குஞ் சுடுகாடாம் ! ( மாற்றம் ) - 3
நூற்றுக்கு நூறு தன்னலந்தான் ;
நொறுங்கிப் புழுங்குதுப் பொதுநலந்தான் ;
ஏற்றுத் திருந்தவும் மனமில்லையே ;
ஏற்றால் உடல்நலக் கேடில்லையே ! ( மாற்றம் ) - 4
பொறிஞர் இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக