இராதே
eradevadassou
செவ்வாய், 10 நவம்பர், 2015
புதன், 26 ஆகஸ்ட், 2015
அன்னை தெரசா பிள்ளைத் தமிழ் - தால் பருவம்
புல்லின் நுனியில் பனிசிரிக்கும்;
பூவி னிதழில் தேன்சிரிக்கும்;
புரளும் அலையில் நுரைசிரிக்கும்;
புதுநீர் வரவில் மீன்சிரிக்கும் !
நெல்லின் விளைவில் நிலஞ்சிரிக்கும்;
நீரின் மிகையால் நதிசிரிக்கும்;
நீளும் இரவில் இருள்சிரிக்கும்;
நிலவின் உலாவில் ஒளிச்சிரிக்கும் !
வெள்ளு டையம்மை குமின்சிரிப்பில்
விளைவில் வறியோர் வாழ்வுயரும்
வெற்றிச் செல்வி சிரிப்பழகி
வியனு லகாளும் கோமகளே !
எல்லை இல்லாப் புன்சிரிப்பே !
எழிலே ! தாலே தாலேலோ
இன்பந் ததும்பும் தெரசாவே !
இமையே ! தாலே தாலேலோ
-இராதே
பூவி னிதழில் தேன்சிரிக்கும்;
புரளும் அலையில் நுரைசிரிக்கும்;
புதுநீர் வரவில் மீன்சிரிக்கும் !
நெல்லின் விளைவில் நிலஞ்சிரிக்கும்;
நீரின் மிகையால் நதிசிரிக்கும்;
நீளும் இரவில் இருள்சிரிக்கும்;
நிலவின் உலாவில் ஒளிச்சிரிக்கும் !
வெள்ளு டையம்மை குமின்சிரிப்பில்
விளைவில் வறியோர் வாழ்வுயரும்
வெற்றிச் செல்வி சிரிப்பழகி
வியனு லகாளும் கோமகளே !
எல்லை இல்லாப் புன்சிரிப்பே !
எழிலே ! தாலே தாலேலோ
இன்பந் ததும்பும் தெரசாவே !
இமையே ! தாலே தாலேலோ
-இராதே
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
எனக்குப் புரியல ! - உருப்படி,
எடுப்பு
எனக்குப் புரியல - இங்கு
எதுவும் சரியில ! (எனக்கு)
தொடுப்பு
உண்மை உரசி பார்த்துப் பழகி
உயிரைக் கொடுத்து காக்கும் நட்பு (எனக்கு)
முடிப்பு
கணக்குப் போட்டுப் பழகுறான்
கவிழ்க்கக் காயை நகர்த்துறான்
கதையை முடித்துப் போகும்போது
கழுத்தை அறுத்தே கொல்லுறான் ! (எனக்கு)
சிரிச்சிச் சிரிச்சிப் பழகுறான்
சிரிப்பில் ஆழ்த்தி மயக்குறான்
சிரிச்சி முடித்துப் பார்க்கும்போது
திருடிக் கம்பி நீட்டுறான் ! (எனக்கு)
அன்பை யூட்டிப் பழகுறான்
அணைப்பில் பாசங் காட்டுறான்
அடையும் நோக்கம் முடிந்தபின்னே
அமுக்கி மூச்சை நிறுத்துறான் ! (எனக்கு)
நட்பை நாடி பழகுறான்
நாமம் குழைத்துப் போடுறான்
நஞ்சை வாயில் ஊற்றிப்பின்னால்
நல்ல வன்போல் நடிக்கிறான் ! (எனக்கு)
பழகத் துடிக்கும் நண்பனே
பார்த்துப் பழகு நண்பனே
பயனெண் ணாமல் பண்பினோடு
பகையை வெல்வாய் நண்பனே ! (எனக்கு) - இராதே
எனக்குப் புரியல - இங்கு
எதுவும் சரியில ! (எனக்கு)
தொடுப்பு
உண்மை உரசி பார்த்துப் பழகி
உயிரைக் கொடுத்து காக்கும் நட்பு (எனக்கு)
முடிப்பு
கணக்குப் போட்டுப் பழகுறான்
கவிழ்க்கக் காயை நகர்த்துறான்
கதையை முடித்துப் போகும்போது
கழுத்தை அறுத்தே கொல்லுறான் ! (எனக்கு)
சிரிச்சிச் சிரிச்சிப் பழகுறான்
சிரிப்பில் ஆழ்த்தி மயக்குறான்
சிரிச்சி முடித்துப் பார்க்கும்போது
திருடிக் கம்பி நீட்டுறான் ! (எனக்கு)
அன்பை யூட்டிப் பழகுறான்
அணைப்பில் பாசங் காட்டுறான்
அடையும் நோக்கம் முடிந்தபின்னே
அமுக்கி மூச்சை நிறுத்துறான் ! (எனக்கு)
நட்பை நாடி பழகுறான்
நாமம் குழைத்துப் போடுறான்
நஞ்சை வாயில் ஊற்றிப்பின்னால்
நல்ல வன்போல் நடிக்கிறான் ! (எனக்கு)
பழகத் துடிக்கும் நண்பனே
பார்த்துப் பழகு நண்பனே
பயனெண் ணாமல் பண்பினோடு
பகையை வெல்வாய் நண்பனே ! (எனக்கு) - இராதே
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015
தோழா நேர்கொள் ! - கண்ணி
உள்ளத்தில் கள்ளம் வைத்தே
உதட்டினில் வெல்லம் வைத்தே
ஊர்கூட்ட நினைப்பா ரடா - தோழா
உண்மைகள் மறைப்பா ரடா !
வள்ளுவன் பெயரைச் சொல்லி
வாய்கூச பொய்கள் சொல்லி
வலைகளை விரிப்பா ரடா - தோழா
வஞ்சக நெஞ்ச ரடா !
கொள்கைமான் காந்தி யாரைக்
கொன்றவன் கோட்சே வுக்குக்
கொடிகட்டி மகிழ்வா ரடா - தோழா
கொலைவெறிக் கூட்ட மடா !
முள்மன வேலி யிட்டு
முடக்கிடும் மடமை பேணி
முரண்பகை வளர்ப்பா ரடா - தோழா
மூட்டித்தீக் காய்வா ரடா !
மக்களைத் தூண்டி விட்டு
மதவாதம் நாளும் பேசி
மகிழ்வினில் திளைப்பா ரடா - தோழா
மதவெறி அரக்க ரடா !
வக்கனை கூத்தும் ஆடி
வகைவகை கதைகள் கூறி
வாக்குகள் சேர்ப்பா ரடா - தோழா
வழிப்பறி கும்ப லடா !
முக்கண்ணன் மாதோர் பாகன்
முழுக்கதை குறைகள் கூறி
முடக்கினர் எழுத்தை யடா - தோழா
மௌடிக கூட்ட மடா !
எக்காள மிடுவோர் தம்மை
எதிர்த்திட ஒன்றாய்க் கூடி
இயங்கிட தோள்கொ டடா - தோழா
எதிரியை நேர்கொள் ளடா !
-இராதே
உதட்டினில் வெல்லம் வைத்தே
ஊர்கூட்ட நினைப்பா ரடா - தோழா
உண்மைகள் மறைப்பா ரடா !
வள்ளுவன் பெயரைச் சொல்லி
வாய்கூச பொய்கள் சொல்லி
வலைகளை விரிப்பா ரடா - தோழா
வஞ்சக நெஞ்ச ரடா !
கொள்கைமான் காந்தி யாரைக்
கொன்றவன் கோட்சே வுக்குக்
கொடிகட்டி மகிழ்வா ரடா - தோழா
கொலைவெறிக் கூட்ட மடா !
முள்மன வேலி யிட்டு
முடக்கிடும் மடமை பேணி
முரண்பகை வளர்ப்பா ரடா - தோழா
மூட்டித்தீக் காய்வா ரடா !
மக்களைத் தூண்டி விட்டு
மதவாதம் நாளும் பேசி
மகிழ்வினில் திளைப்பா ரடா - தோழா
மதவெறி அரக்க ரடா !
வக்கனை கூத்தும் ஆடி
வகைவகை கதைகள் கூறி
வாக்குகள் சேர்ப்பா ரடா - தோழா
வழிப்பறி கும்ப லடா !
முக்கண்ணன் மாதோர் பாகன்
முழுக்கதை குறைகள் கூறி
முடக்கினர் எழுத்தை யடா - தோழா
மௌடிக கூட்ட மடா !
எக்காள மிடுவோர் தம்மை
எதிர்த்திட ஒன்றாய்க் கூடி
இயங்கிட தோள்கொ டடா - தோழா
எதிரியை நேர்கொள் ளடா !
-இராதே
கண்ணாம் பூச்சி
கண்ணாம் பூச்சி வாழ்க்கை - இதில்
காசென்ன பணமென்ன சேர்க்க ! (கண்ணா )
ஆசை கொண்டவன் மனமோ
அந்தரத்தில் ஆடுதே !
ஆள பலகோடி தேடி
ஆலவட்டம் போடுதே ! (கண்ணா)
மூணு வேளைச்சோற்றை யெண்ணி
மூச்சுவாங்கும் உயிரு !
முனுமு னுக்குதே உலகு
முடிச்சுவிழுந்த கயிறு ! (கண்ணா)
ஆன வமனக் குரங்கு
ஆட்டமாடித் தாவுதே !
ஆடுங் கிளைத்தானு டைந்தே
அதோகதி ஆவுதே ! (கண்ணா)
-இராதே
காசென்ன பணமென்ன சேர்க்க ! (கண்ணா )
ஆசை கொண்டவன் மனமோ
அந்தரத்தில் ஆடுதே !
ஆள பலகோடி தேடி
ஆலவட்டம் போடுதே ! (கண்ணா)
மூணு வேளைச்சோற்றை யெண்ணி
மூச்சுவாங்கும் உயிரு !
முனுமு னுக்குதே உலகு
முடிச்சுவிழுந்த கயிறு ! (கண்ணா)
ஆன வமனக் குரங்கு
ஆட்டமாடித் தாவுதே !
ஆடுங் கிளைத்தானு டைந்தே
அதோகதி ஆவுதே ! (கண்ணா)
-இராதே
நிலா
கொட்டுங் கொட்டும் பனி
குளிர் நிலா -புவி
ஒட்டி ஒட்டிச் சுழன்
றோடும் நிலா !
குட்டிக் குட்டிப் பிறை
குறை நிலா - முழு
வட்ட மாகும் எழில்
மஞ்சள் நிலா !
பட்டு வெய்யோன் ஒளிப்
படர் நிலா - மழை
முட்டும் முட்டும் முகில்
மூடும் நிலா !
விட்டே ஈர்க்கும் கடல்
விசை நிலா - அலை
எட்டித் துள்ளச் செயும்
ஈர நிலா !
பாட்டி சுட்ட வடை
பகர் நிலா - பலர்
கூட்டாஞ் சோறு பெறும்
கூடல் நிலா !
வாட்டுங் கன்னி நுதல்
மலர் நிலா - அது
காட்டும் மன்ம தனின்
காதல் நிலா !
தீட்டும் கும்மி ருட்டுத்
திரை நிலா - அவை
சூட்டுங் கோள்கள் நிழல்
சூழும் நிலா !
காட்டும் வண்ண எழில்
கலை நிலா - சுடர்
மீட்டி இருள் மாய
மேவும் நிலா !
-இராதே
குளிர் நிலா -புவி
ஒட்டி ஒட்டிச் சுழன்
றோடும் நிலா !
குட்டிக் குட்டிப் பிறை
குறை நிலா - முழு
வட்ட மாகும் எழில்
மஞ்சள் நிலா !
பட்டு வெய்யோன் ஒளிப்
படர் நிலா - மழை
முட்டும் முட்டும் முகில்
மூடும் நிலா !
விட்டே ஈர்க்கும் கடல்
விசை நிலா - அலை
எட்டித் துள்ளச் செயும்
ஈர நிலா !
பாட்டி சுட்ட வடை
பகர் நிலா - பலர்
கூட்டாஞ் சோறு பெறும்
கூடல் நிலா !
வாட்டுங் கன்னி நுதல்
மலர் நிலா - அது
காதல் நிலா !
தீட்டும் கும்மி ருட்டுத்
சூட்டுங் கோள்கள் நிழல்
சூழும் நிலா !
காட்டும் வண்ண எழில்
கலை நிலா - சுடர்
மீட்டி இருள் மாய
மேவும் நிலா !
-இராதே
திங்கள், 26 ஜனவரி, 2015
எங்கே தேடுவேன் ?
எடுப்பு
எங்கே தேடுவேன் ? - குளத்தை
எங்கே தேடுவேன் ? (எங்கே)
தொடுப்பு
பாட்டன் பூட்டன் சேயனும்
வெட்டி வைத்த குளத்தை
பட்டித் தொட்டு யெங்கிலும்
தட்டுப் பட்டக் குளத்தை (எங்கே)
முடிப்பு
குப்பைகொட் டிமூடியே மறைத்துவிட் டனரோ ?
கூளங்கூள மாய்ஆலைக் கழிவைக்கொட் டினரோ ?
குடியிருக்க வீட்டுமனை பிரித்துவிற் றனரோ ?
கோபுரமாய்க் கட்டிடங்கள் கட்டியேவைத் தனரோ ? (எங்கே)
மூடநம்பிக் கைகொண்டே மூடிவிட் டனரோ ?
முழுமுதல் பிள்ளையாரைப் போட்டுநிரப் பினரோ ?
முழுப்பூச ணிக்காயைச் சோற்றில்மறைத் ததுபோல்
முழுவிளை யாட்டுத்திட லாகமாற் றினரோ ? (எங்கே)
குளமே ! குளமே ! குளமே ! குளமே !- உன்னை
எங்கே தேடுவேன் ?
-இராதே
எங்கே தேடுவேன் ? - குளத்தை
எங்கே தேடுவேன் ? (எங்கே)
தொடுப்பு
பாட்டன் பூட்டன் சேயனும்
வெட்டி வைத்த குளத்தை
பட்டித் தொட்டு யெங்கிலும்
தட்டுப் பட்டக் குளத்தை (எங்கே)
முடிப்பு
குப்பைகொட் டிமூடியே மறைத்துவிட் டனரோ ?
கூளங்கூள மாய்ஆலைக் கழிவைக்கொட் டினரோ ?
குடியிருக்க வீட்டுமனை பிரித்துவிற் றனரோ ?
கோபுரமாய்க் கட்டிடங்கள் கட்டியேவைத் தனரோ ? (எங்கே)
மூடநம்பிக் கைகொண்டே மூடிவிட் டனரோ ?
முழுமுதல் பிள்ளையாரைப் போட்டுநிரப் பினரோ ?
முழுப்பூச ணிக்காயைச் சோற்றில்மறைத் ததுபோல்
முழுவிளை யாட்டுத்திட லாகமாற் றினரோ ? (எங்கே)
குளமே ! குளமே ! குளமே ! குளமே !- உன்னை
எங்கே தேடுவேன் ?
-இராதே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





.jpg)

.jpg)
.jpg)