இராதே

இராதே
eradevadassou

புதன், 19 அக்டோபர், 2016

துளிப்பா - 28

வாய்க்கரிசி
தின்னுமா
பிணம் ?



இருண்ட வானம்
வெளுக்குமா
சலவைத் தொழிலாளி ?



அடுக்ககம்
அணிலாடும் முன்றில்
எங்கே ?



சூடான செய்தி
ஆவிபறக்கிறது
தேனீர்



கைக் கழுவிய
உரிமை
கச்சத் தீவு

                                          -இராதே


திங்கள், 17 அக்டோபர், 2016

துளிப்பா - 27

பெட்ரோலில்
இயங்குகிறது
நடுவணரசு



கரை தொடும்
அலையின் சிரிப்பு
நுரை



விளம்பரம்
பணம் பிடுங்கும்
பம்மாத்து



குயிலிசையில்
நனைகிறது காகம்
வாடகைத் தாய்



நூலிழையில்
வாழ்க்கை
சிலந்தி

                                   -இராதே

துளிப்பா -26

மட்காத குப்பை
தன்னல
உரம்



அலங்காநல்லூர் சல்லிக்கட்டு
காளையை அடக்கும்
உலகமையம்



புத்தர் சிரித்தார்
உடைந்தது 
மௌனம்



காயமின்றி
மரணம்
கதிர்வீச்சு



சாரலில்
சிலிர்க்கிறது
அருவி இன்பம்

                                                        - இராதே

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

துளிப்பா - 25

வாளித் தண்ணீரைத்
துழவுகிறது 
நிலவு




நா சப்பு கொட்டுகிறது
தேனீயின்
உழைப்பு




கானல் நீரைக்குடித்தே
பசியாறுகிறது
வெயில்




நகம் கடிக்க
பிரசவிக்கின்றன
பிறைநிலாக்கள்




விழுது ஊஞ்சல்
நினைவுகள்
சிறகடிப்பு
                                             -இராதே

துளிப்பா - 24

பல்லாங்குழி
ஆடுங் காற்று
புல்லாங்குழல்




வேலியில்
கதக்களி
ஓணான்





அடைபடுகிறது காவிரி 
காகம்
எங்கே ?



கரை படிந்த காலடிகள்
துடைக்கும்
அலைகள்





சாதிய நெடி
தொடர் தும்மல்
ஆணவக் கொலைகள்

                                                 -இராதே






துளிப்பா - 23

கர்நாடகா ஆடும்
கண்ணாம்பூச்சி
காவிரி



பாறையை அறைந்த
பெருமிதத்துடன் திரும்பும்
அலைகள்



சல்லடையில்
அள்ளும் தண்ணீர்
பனிக்கட்டி ?




நடமாடும்
மலர்க் கண்காட்சி
மகளிர் கல்லூரி




ஓட்டைகளில்
ஒழுகுகிறது இசை
நாதசுரம்

                                           -இராதே





துளிப்பா - 22

சுவடிக்குள்
மயிலிறகு
வாழ்க்கை






ஓடுகிறது வாழ்க்கை
துரத்தும் சிக்கல்களுக்கு
கால் வலிக்கவில்லை




எண்ணத்தை
மேய்ந்து கொண்டிருக்கிறது
கவலை





சுழன்றே
தேய்கிறது
நிலவு




மழைவருது ! மழைவருது !
குடுகுடுப்புக்காரன்
தும்பி

                                                          -இராதே