இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 15 நவம்பர், 2013

மின்மினி

இரவில்  ஒளிரும்  மின்மினி
          இயற்கை  தந்த  வண்டினம் ;
பரவும்  இருட்டில்  மின்மினி
          பறக்கும்  நெருப்பாய்த்  தோன்றுது ;
நரம்புத்  தூண்டுஞ்  செயல்களால்
          நடன  மிட்டே  ஒளிருது
புரளும்  புழுக்கள்  நத்தையைப்
          பிடித்தே  உண்ணும்  மின்மினி !


முட்டை  புழுக்கள்  வண்டென
          மூன்று  நிலையும்  ஒளிருமே ;
கொட்டும்  அரிவாள்  கொடுக்கினால்
          கொடுக்கும்  மயக்க  மருந்தினில்
பட்டு  வீழும்  இரைகளில்
          பாய்ச்சும்  செரிக்கும்  நொதிகளில்
விட்டு  விட்டுக்  கூழாகும்
          விருந்தாம்  இரையை  உறிஞ்சிடும் !


கூட்டுப்  பொருளாம்  லூசிபெரின்
         கூடும்  மூச்சு  காற்றுடன்
ஊட்ட  மேற்றும்  மெக்னிசியம்
          ஒன்றி  ஒளியை  உமிழுதே ;
நோட்டம்  பார்க்கும்  பறவைகள்
          நிறைக்கும்  இதனைக்  கூட்டினுள்
வாட்ட  மான  ஓளியிலே
          வசதி  யாக  வாழுமே !
                                                                            -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக