இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 26 நவம்பர், 2013

மண்புழு

          மண்ணில்  நெளியும்  மண்புழு
                    மண்ணைத்  தின்று  வாழ்ந்திடும் ;
          மண்ணைத்  துளைத்தே  உழுவதால்
                    மண்ணில்  காற்றின்  வினையுறும் ;
          மண்ணின்  வளமும்  பெருகிடும் ;
                    மகசூல்  நிறைந்து  வழிந்திடும் ;
          உண்ணும்  பயிர்கள்  செழிப்புற
                    உழவர்  நண்பன்  மண்புழு !


          சின்னச்  சின்ன  துண்டங்கள்
                    சேர்ந்த  வளையில்  தொடர்ச்சியில்
          முன்னும்  பின்னும்  சுருங்கியே
                    முழுமை யாக  ஊர்ந்திடும் ;
          தின்னும்  வாயின்  பின்புறம்
                    திருகும்  நீண்ட  உறுப்புண்டாம் ;
          உண்ணும்  இரையைத்  தேடிட
                    உதவி  செய்யும்  உறுப்பிதாம் !


          மண்ணுங்  குளிரும்  வேளையில்
                    வலையை  விட்டு  வெளிவரும் ;
          உண்ணும்  இரையை  நாடியே
                    உணவு  வேட்டை  யாடிடும் ;
          எண்ணி  லடங்கா  இரைப்பைகள்
                    இதனின்  உடலில்  உள்ளதால்
          தின்னத்  தின்ன  செரித்திடும் ,
                     செழுமை  உரங்கள் வழங்கிடும் !
                                          -இராதே 

2 கருத்துகள்:

  1. இரவு 11.30 மணிக்கு கடற்கரை சாலையில் "பெண் குழு" வை ரசித்துக்கொண்டிருக்கும் எனக்கு, கிட்டத்தட்ட அதே நேரத்தில் "மண் புழு" பற்றி கவிதை எழுதும் நண்பன்..."பாமரன் vs "பா மகன்"

    பதிலளிநீக்கு
  2. இரவு 11.30 மணிக்கு கடற்கரை சாலையில் "பெண் குழு" வை ரசித்துக்கொண்டிருக்கும் எனக்கு, கிட்டத்தட்ட அதே நேரத்தில் "மண் புழு" பற்றி கவிதை எழுதும் நண்பன்..."பாமரன் vs "பா மகன்"

    பதிலளிநீக்கு