எடுப்பு
தேடிப் பொழியுது மாமழை நீர் - அதைத்
தேக்கி நிரப்பிடும் வழிகளைப் பார் (தேடி)
தொடுப்பு
வாடி வற்றிடும் ஏரியெல் லாம் - வளம்
மாய வறண்டிடும் குளங்களெல் லாம் (தேடி)
முடிப்பு
ஏரி முழுதுமே பயிர்வள ரும் - அதில்
எப்படி நீர்நிலை உள்நிரம் பும் ?
ஊரின் குப்பைகள் குளத்தடை யும் - பின்
ஊருணி எங்கணும் நிறைந்திருக் கும் (தேடி)
ஓடும் ஓடையில் வீடுக ளாம் - அதன்
ஓட்டம் தடைபடும் சாக்கடை யாம்
வீட்டின் கிணறுகள் பொருட்கிடங் காம் - இனி
வெறுமை உலவிடும் தடயங்க ளாம் (தேடி)
ஊறுங் குட்டைகள் மாய்ந்தன வே - நீர்
ஊற்றின் கண்களும் ஓய்ந்தன வே
ஆறும் மணல்பட காய்ந்தன வே - விழும்
அருவி மலைபட தேய்ந்தன வே (தேடி)
_இராதே
மா மழை சேர்ப்போம்...
பதிலளிநீக்குமானுடம் காப்போம்...!
மா மழை சேர்ப்போம்...
பதிலளிநீக்குமானுடம் காப்போம்...!