எடுப்பு
உள்ளங்கொ திக்குதை யோ - சின
வெள்ளம்பெ ருகுதை யோ (உள்ளம்)
தொடுப்பு
கள்வரோ வெஞ்சிறை உள்ளிருந் தேதீய
கொள்ளைகள் செய்யும் கொடுமையை எண்ணினால் (உள்ளம்)
முடிப்பு
ஏனென்று கேட்கவோர் ஆளில்லை யா ? - மக்கள்
ஏங்கிய ழுங்குரல் கேட்கலை யா ?
நாணும்ஈ னச்செயல் நின்றிடு மா ? - காவல்
நாலுஞ்செய் தேஇதை வென்றிடு மா ? - எங்கள் (உள்ளம்)
செல்பேசி நாடகந் தொடரனு மா ? - காவல்
சேவையின் நாணயம் இடறனு மா ?
கொள்ளையர் குற்றங்கள் முடங்கிடு மோ ? - அவர்
கொட்டமும் முற்றிலும் அடங்கிடு மோ ? - எங்கள் (உள்ளம்)
தீச்செயல் ஊடாட யார்உடந் தை ? - சிறை
சேவகர் சூழலோபே சாமடந் தை ?
அச்சமும் ஐயமும் விலகிடு மோ ? - மக்கள்
ஆனந்த பெருமூச்சு பெருகிடு மோ ? - எங்கள் (உள்ளம்)
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக