நலமே தருமே கீரைங்க ;
நாளும் உணவில் சேருங்க ;வளமை கூடும் பாருங்க ;
வாழும் நாட்கள் முழுதுமே !
நிலத்தில் நூறு வயதுடன்
நிலைக்க கீரை உண்ணுங்க ;
இளமை யோடு வாழ்ந்திட
இயக்கும் உடலைக் கீரைங்க !
கூட்டு , பொரியல் , செய்யலாம் ;
குழம்பு , சாம்பார் வைக்கலாம் ;
கட்டி சட்னி அரைக்கலாம் ;
கடைந்து மசியல் எடுக்கலாம் ;
சட்டி நிறையக் கீரையில்
சாறும் , ரசமும் சமைக்கலாம் ;
தட்டில் இட்டு சோறுடன்
சத்துக் கீரை உண்ணுங்க !
நீரை இழக்கும் நீரிழிவை
நிறுத்துங் கீரை நீராரை ;
ஆரைக் கீரை அரைக்கீரை
அறுக்கும் நோயை உள்ளுற
கீரைத் தண்டு முளைக்கீரை
கீழா நெல்லி சிறுகீரை
சேர உண்டால் நோயெல்லாம்
திகைக்க ஓடி ஒளியுமே!
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக