மூட்டு வலிக்கு முடக்கற்றான் ;
முதுமை குறைக்க பசலைங்க ;
வேட்டு வைக்கும் வாயுவை
விரட்டும் வாதக் கீரைங்க ;
மீட்கும் இளமை தூதவளை ;
மினுக்க பொன்னாங் கன்னிங்க ;
வாட்டி வதைக்கும் பிணியெலாம்
வாரி யடித்தே ஓடுங்க !
அகத்தி வயிற்றுப் புழுக்களை
அகற்றித் தள்ளும் வெளியேங்க ;
முகத்தில் பொலிவு பொங்கிட
முருங்கைக் கீரை உதவுங்க ;
புகட்டும் மணத்தக் காளியும்
புண்ணை ஆற்றுங் கீரைங்க ;
சகல சத்தும் நல்கிடும்
சமச்சீர் உணவு கீரைங்க !
மூளை சிறக்க வல்லாரை;
முழுக்க செரிக்க வெந்தியம் ;
பாளைக் கீரை புளிக்கீரை
பருப்புக் கீரை ""காசினி""யும்
வேளை பார்த்துப் பகுத்துண்டால்
வேண்டும் நன்மை கிட்டுங்க ;
நாளை யென்று தள்ளாமல்
நாளுங் கீரை உண்ணுங்க !
-இராதே
முதுமை குறைக்க பசலைங்க ;
வேட்டு வைக்கும் வாயுவை
விரட்டும் வாதக் கீரைங்க ;
மீட்கும் இளமை தூதவளை ;
மினுக்க பொன்னாங் கன்னிங்க ;
வாட்டி வதைக்கும் பிணியெலாம்
வாரி யடித்தே ஓடுங்க !
அகத்தி வயிற்றுப் புழுக்களை
அகற்றித் தள்ளும் வெளியேங்க ;
முகத்தில் பொலிவு பொங்கிட
முருங்கைக் கீரை உதவுங்க ;
புகட்டும் மணத்தக் காளியும்
புண்ணை ஆற்றுங் கீரைங்க ;
சகல சத்தும் நல்கிடும்
சமச்சீர் உணவு கீரைங்க !
மூளை சிறக்க வல்லாரை;
முழுக்க செரிக்க வெந்தியம் ;
பாளைக் கீரை புளிக்கீரை
பருப்புக் கீரை ""காசினி""யும்
வேளை பார்த்துப் பகுத்துண்டால்
வேண்டும் நன்மை கிட்டுங்க ;
நாளை யென்று தள்ளாமல்
நாளுங் கீரை உண்ணுங்க !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக