இராதே
eradevadassou
சனி, 10 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
சனி, 13 ஜூலை, 2013
இயற்கையோடு வாழ்வோம் !
தவழ்ந்திடும் காற்றின் தூய்மை
தவணையில் கெடுத்தோம் மேலும்
அவனியின் அழகை மாய்க்க
ஆலையின் கழிவைச் சேர்த்தோம்;
பவனியாய் ஊர்ந்த ஆற்றைப்
பையவே மடியச் செய்தோம்;
துவண்டிடும் உலகைத் தாங்கி
தூக்கிட மறந்து விட்டோம்!
கடந்திடும் வண்டி உந்து
கரிப்புகை உமிழ விட்டோம்;
அடர்ந்திடும் காட்டை வெட்டி
அடர்மழை குறைத்து விட்டோம்;
படலமாம் ஓசோன் உள்ளே
பலப்பல ஓட்டை யிட்டோம்;
தொடர்ந்திதைச் செய்யச் செய்ய
தொடருமே தொல்லை என்றும்
பரிதியின் கதிரின் வெம்மை
பனிமலை உருகச் செய்யும்;
எரிந்திடும் பயிர்கள் பச்சை
இயற்கையோ எடுக்கும் பிச்சை
உரிந்திடும் ஓசோன் ஊடே
உரசிடப் புகுமே ஊதா
அரித்திடும் தோல்நோய் எங்கும்
அடிக்கடி வந்து தீரும்!
கரிவிடும் வண்டி ஓட்டம்
கடுமையாய்த் தவிர்த்தல் நன்றாம்;
எரிந்திடும் விளக்கின் தன்மை
இயல்பினைக் குறைத்தல் காண்போம்;
எரிச்சல் விடுக்க வைக்கும்
இளங்குளிர் கருவி ஆற்றல்
உரியநல் வழியில் மாற்றி
ஒளிருவோம் இயற்கை யோடே !
-இராதே
தவணையில் கெடுத்தோம் மேலும்
அவனியின் அழகை மாய்க்க
ஆலையின் கழிவைச் சேர்த்தோம்;
பவனியாய் ஊர்ந்த ஆற்றைப்
பையவே மடியச் செய்தோம்;
துவண்டிடும் உலகைத் தாங்கி
தூக்கிட மறந்து விட்டோம்!
கடந்திடும் வண்டி உந்து
கரிப்புகை உமிழ விட்டோம்;
அடர்ந்திடும் காட்டை வெட்டி
அடர்மழை குறைத்து விட்டோம்;
படலமாம் ஓசோன் உள்ளே
பலப்பல ஓட்டை யிட்டோம்;
தொடர்ந்திதைச் செய்யச் செய்ய
தொடருமே தொல்லை என்றும்
பரிதியின் கதிரின் வெம்மை
பனிமலை உருகச் செய்யும்;
எரிந்திடும் பயிர்கள் பச்சை
இயற்கையோ எடுக்கும் பிச்சை
உரிந்திடும் ஓசோன் ஊடே
உரசிடப் புகுமே ஊதா
அரித்திடும் தோல்நோய் எங்கும்
அடிக்கடி வந்து தீரும்!
கரிவிடும் வண்டி ஓட்டம்
கடுமையாய்த் தவிர்த்தல் நன்றாம்;
எரிந்திடும் விளக்கின் தன்மை
இயல்பினைக் குறைத்தல் காண்போம்;
எரிச்சல் விடுக்க வைக்கும்
இளங்குளிர் கருவி ஆற்றல்
உரியநல் வழியில் மாற்றி
ஒளிருவோம் இயற்கை யோடே !
-இராதே
ஞாயிறு, 26 மே, 2013
ஆசைகள்
தெளிந்த நீரோடையாய்
பயணப்படும் எண்ணங்களில்
நிரம்பி வழிகின்றன
அணையிடும்
ஆசைகள் !
கனவுகளால்
காயப்பட்டே
ஆசைகளோடு
சலனப்பட்டுக்கிடக்கிறது
மனசு !
எச்சில் ஊறும்
இனிப்பகள்
மறக்கடிக்கப்பட்ட
நாக்கு !
காரங்களுக்கும்
புளிப்புகளுக்கும்
கடிவாளம் இடும்
வாய் !
உப்பில்லாப் பண்டங்கள்
உட்செல்லும்
குப்பைத்தொட்டி
வயிறு !
காணக்கிடைக்கும்
தின்பண்டங்களைத்
தின்பதற்கில்லா
ஏக்கத்தில்
வயசு !
மருத்துவத்தில் வாழ்வு
நடத்த செபிக்கும்
மூளை !
உப்புச் சப்பில்லா
உயிரைப் பிடித்து
வைத்து கொள்ளும்
போராட்டத்தில்
ஆசைகளால்
களவாடப்படுகிறது
வாழ்க்கை !
-இராதே
பயணப்படும் எண்ணங்களில்
நிரம்பி வழிகின்றன
அணையிடும்
ஆசைகள் !
கனவுகளால்
காயப்பட்டே
ஆசைகளோடு
சலனப்பட்டுக்கிடக்கிறது
மனசு !
எச்சில் ஊறும்
இனிப்பகள்
மறக்கடிக்கப்பட்ட
நாக்கு !
காரங்களுக்கும்
புளிப்புகளுக்கும்
கடிவாளம் இடும்
வாய் !
உப்பில்லாப் பண்டங்கள்
உட்செல்லும்
குப்பைத்தொட்டி
வயிறு !
காணக்கிடைக்கும்
தின்பண்டங்களைத்
தின்பதற்கில்லா
ஏக்கத்தில்
வயசு !
மருத்துவத்தில் வாழ்வு
நடத்த செபிக்கும்
மூளை !
உப்புச் சப்பில்லா
உயிரைப் பிடித்து
வைத்து கொள்ளும்
போராட்டத்தில்
ஆசைகளால்
களவாடப்படுகிறது
வாழ்க்கை !
-இராதே
சனி, 25 மே, 2013
இன்னும் நீ . . .
மறந்து விடாதே
மானிடனே !
எச்சங்களை
ருசித்துக்கொண்டு
உச்சங்களை
அடையாமல்
மிச்சத்தில் தான்
இன்னும் நீ ...
மூச்சுத் திணறலில்
மூழ்கடிக்க வைக்கும்
முற்றிய சாதிமையிருட்டால்
மூடிய அறையில் தான்
இன்னும் நீ ...
மதமாச்சர்யங்கள்
மூட்டியிருக்கும்
மூட்ட இருக்கத்தில் தான்
இன்னும் நீ ...
சாதி சாக்கடையில்
சல்லாபிக்கும்
புழுக்களாய்
புழுத்து கிடக்கிறாய்
இன்னும் நீ ...
வாய் கிழிய
சத்தமிடும்
வறட்டு தவளையாய்
கிணற்றுள் கிடக்கிறாய்
இன்னும் நீ ...
-இராதே
புதன், 26 டிசம்பர், 2012
தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ்- சப்பாணிப் பருவம்
அரளிப் பூவின் சிவப்பழகோ ?
அரக்கு மெழுகின் சிவப்பழகோ ?
அரும்மா துளையின் சிவப்பழகோ ?
செந்தேன் நிறத்தின் சிவப்பழகோ ?
செங்காந் தாள்பூ சிவப்பழகோ ?
செம்மண் காட்டும் சிவப்பழகோ ?
செந்தூ ரத்தின் சிவப்பழகோ ?
சிந்தா மணிஉன் சிந்தையிலே
சிறக்கும் சிவப்பே செவ்வழகு !
செம்மை கொடியும் பேரழகு !
செயலே ! மூச்சே நீயழகு !
நந்தா விளக்கே நவமணியே !
நாயக கொட்டுக சப்பாணி !
நல்ல கண்ணே எம்தலைவ
நயமாய்க் கொட்டுக சப்பாணி !
-இராதே
( டிசம்பர் 25 தோழருடைய பிறந்த நாள்)
வெள்ளி, 9 நவம்பர், 2012
சோம்பல்கள்
எனக்கானதாய்
சாய்வு நாற்காலியைத்
துடைத்து வைத்து
சாய வைக்க
காத்துக் கிடக்கின்றன !
உள்ளும் வெளியுமாய்
மேலும் கீழுமாய்ச்
சல்லாபத்தில்
புரண்டு திரண்டு
திளைக்கின்றன
மனத்திற்குள்
துரத்தும் பணிகளின்
வேகத்தை மழுங்கடித்து
சுகத்திற்கானத் தேடல்களில்
சுருதி கூட்டி
லயித்திருக்க
லாவகமாக
லகான் பிடித்தச்
சவாரி செய்கின்றன !
விடிந்த பின்னும்
படுக்கையில்
பசைப் போட்டே
ஒட்ட வைத்து
தேனீர் கோப்பையின்
சிணுங்கல்களில்
உடலை முருக்கேற்றித்
திமிற வைக்கின்றன !
செய்திகளை
மிகைப் படுத்தும்
ஊடகங்களாய்ப்
பணிகளை
மலையாய்க்
குவித்துக் காட்டிக்
குப்புற விழச்
செய்கின்றன !
எழுந்து
பார்ப்பதற்குள்
வழுக்கி விழும்
வாய்ப்புகளை
வலை விரித்து
வாகாய்ச் சிரிக்கின்றன !
-இராதே
சாய்வு நாற்காலியைத்
துடைத்து வைத்து
சாய வைக்க
காத்துக் கிடக்கின்றன !
உள்ளும் வெளியுமாய்
மேலும் கீழுமாய்ச்
சல்லாபத்தில்
புரண்டு திரண்டு
திளைக்கின்றன
மனத்திற்குள்
துரத்தும் பணிகளின்
வேகத்தை மழுங்கடித்து
சுகத்திற்கானத் தேடல்களில்
சுருதி கூட்டி
லயித்திருக்க
லாவகமாக
லகான் பிடித்தச்
சவாரி செய்கின்றன !
விடிந்த பின்னும்
படுக்கையில்
பசைப் போட்டே
ஒட்ட வைத்து
தேனீர் கோப்பையின்
சிணுங்கல்களில்
உடலை முருக்கேற்றித்
திமிற வைக்கின்றன !
செய்திகளை
மிகைப் படுத்தும்
ஊடகங்களாய்ப்
பணிகளை
மலையாய்க்
குவித்துக் காட்டிக்
குப்புற விழச்
செய்கின்றன !
எழுந்து
பார்ப்பதற்குள்
வழுக்கி விழும்
வாய்ப்புகளை
வலை விரித்து
வாகாய்ச் சிரிக்கின்றன !
-இராதே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








