இராதே
eradevadassou
வியாழன், 14 ஜனவரி, 2016
செவ்வாய், 29 டிசம்பர், 2015
அரங்க நடராச சீரர் !
செந்தமிழ் இவரிடம் கொஞ்சும் -பாடக்
கெஞ்சும் - மடி
துஞ்சும் - இவர்
சிந்தையில் தமிழென்றும் தஞ்சம் - உயர்
சிறப்பாகிய கலைமாமணி தமிழ்மாமணி விருதாகிய
சிறப்புகள் ஏந்திடும் மன்னன் ! - நிதம்
அறங்களைப் பாடிடும் தென்னன் !
சந்தத்தில் இவர்பாடல் துள்ளும் - நெஞ்சை
அள்ளும் - படி
கொள்ளும் - பல
தாளத்தில் ஆடிட உள்ளும் - மொழித்
தண்டாடிடும் செந்தாமரை தமிழாகவே வருமெனச்
சரசத்தில் மண்டிடும் உள்ளம் ! - இன்பம்
உரசிட கண்டிடும் வெள்ளம் !
தன்னிக ரில்லாப்பூந் தோட்டம் - மலர்
நீட்டம் - அன்பின்
ஊட்டம் - நனி
தண்டமிழ் இலக்கண நாட்டம் - சிந்துத்
தனிப்பாடல்கள் உருவாகவே தவமேவிய வரமாகிய
தமிழிசைப் பாடிடும் சூரர் ! - நற்
றமிழ்காக்க போரிடும் வீரர் !
அன்பினில் இவர்க்கிணை யேது - இல்லை
சூது - நட்பின்
தூது - தவ
அன்பிற்குச் சிகரமென் றோது - மன
அன்பாலய பண்பாளரின் பண்பாமிதை பண்பாடிடும்
அரங்கங்கள் நேசிக்கும் தீரர் - தூ ய
அரங்க நடராச சீரர் !
-இராதே
கெஞ்சும் - மடி
துஞ்சும் - இவர்
சிந்தையில் தமிழென்றும் தஞ்சம் - உயர்
சிறப்பாகிய கலைமாமணி தமிழ்மாமணி விருதாகிய
சிறப்புகள் ஏந்திடும் மன்னன் ! - நிதம்
அறங்களைப் பாடிடும் தென்னன் !
சந்தத்தில் இவர்பாடல் துள்ளும் - நெஞ்சை
அள்ளும் - படி
கொள்ளும் - பல
தாளத்தில் ஆடிட உள்ளும் - மொழித்
தண்டாடிடும் செந்தாமரை தமிழாகவே வருமெனச்
சரசத்தில் மண்டிடும் உள்ளம் ! - இன்பம்
உரசிட கண்டிடும் வெள்ளம் !
தன்னிக ரில்லாப்பூந் தோட்டம் - மலர்
நீட்டம் - அன்பின்
ஊட்டம் - நனி
தண்டமிழ் இலக்கண நாட்டம் - சிந்துத்
தனிப்பாடல்கள் உருவாகவே தவமேவிய வரமாகிய
தமிழிசைப் பாடிடும் சூரர் ! - நற்
றமிழ்காக்க போரிடும் வீரர் !
அன்பினில் இவர்க்கிணை யேது - இல்லை
சூது - நட்பின்
தூது - தவ
அன்பிற்குச் சிகரமென் றோது - மன
அன்பாலய பண்பாளரின் பண்பாமிதை பண்பாடிடும்
அரங்கங்கள் நேசிக்கும் தீரர் - தூ ய
அரங்க நடராச சீரர் !
-இராதே
வியாழன், 24 டிசம்பர், 2015
தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சிறுத்தேர் பருவம்
பயிரின் செழிப்போ ஒருபுரட்சி
பசுமை புரட்சி என்பார்கள் ;
பாலின் மிகையோ ஒருபுரட்சி
பால்வெண் புரட்சி என்பார்கள் ;
உயிரைக் கொடுக்கும் ஈகையினை
ஓடுங் குருதி தன்னோடே
ஓங்கும் மக்கள் நலன்காக்க
உழைக்கும் புரட்சி மாபுரட்சி !
கயிற்றை முறுக்கி திரித்ததுபோல்
களத்தில் இணைந்தே போராடிக்
கண்ணாம் மாந்தர் உரிமையினைக்
காணும் புரட்சி செம்புரட்சி !
உயிரை ஈணும் புரட்சியிலே
உணர்வாய்ப் பொதுமை சிந்தையுடன்
ஒழுகும் ஒளியே ! நல்லகண்ணே !
உருளத் தடந்தேர் உருட்டுகவே !
-இராதே
பசுமை புரட்சி என்பார்கள் ;
பாலின் மிகையோ ஒருபுரட்சி
பால்வெண் புரட்சி என்பார்கள் ;
உயிரைக் கொடுக்கும் ஈகையினை
ஓடுங் குருதி தன்னோடே
ஓங்கும் மக்கள் நலன்காக்க
உழைக்கும் புரட்சி மாபுரட்சி !
கயிற்றை முறுக்கி திரித்ததுபோல்
களத்தில் இணைந்தே போராடிக்
கண்ணாம் மாந்தர் உரிமையினைக்
காணும் புரட்சி செம்புரட்சி !
உயிரை ஈணும் புரட்சியிலே
உணர்வாய்ப் பொதுமை சிந்தையுடன்
ஒழுகும் ஒளியே ! நல்லகண்ணே !
உருளத் தடந்தேர் உருட்டுகவே !
-இராதே
கத்தரிக்காய்
உண்ணச் சுவைக்கும் காய்தான் ;
உருண்டு திரண்ட காய்தான் ;
எண்ணெய்க் கொழுப்பை நீக்கி
இதயம் காக்கும் காய்தான் ;
மண்டைக் கவசம் போட்டு
மலைக்க வைக்கும் காய்தான் ;
கொண்டைக் காம்பை நீட்டும்
குண்டு கத்தரிக் காய்தான் !
நரம்பு நோயைப் போக்கும் ;
நாளும் இளமை காக்கும் ;
வரம்பு மீறும் புற்றை
வாகாய்த் தீர்த்து கட்டும் ;
சிரங்கும் அரிப்பும் தோன்றின்
சீண்டிப் பார்க்கும் காய்தான் ;
அரசன் வேடம் பூணும்
அழகு கத்தரிக் காய்தான் !
உருண்டு திரண்ட காய்தான் ;
எண்ணெய்க் கொழுப்பை நீக்கி
இதயம் காக்கும் காய்தான் ;
மண்டைக் கவசம் போட்டு
மலைக்க வைக்கும் காய்தான் ;
கொண்டைக் காம்பை நீட்டும்
குண்டு கத்தரிக் காய்தான் !
நரம்பு நோயைப் போக்கும் ;
நாளும் இளமை காக்கும் ;
வரம்பு மீறும் புற்றை
வாகாய்த் தீர்த்து கட்டும் ;
சிரங்கும் அரிப்பும் தோன்றின்
சீண்டிப் பார்க்கும் காய்தான் ;
அரசன் வேடம் பூணும்
அழகு கத்தரிக் காய்தான் !
சனி, 12 டிசம்பர், 2015
பேய்மழை !
எடுப்பு
பேய்மழை பெய்து பெருவெள்ளம் பாய்ந்தே
ஊரெல்லாம் மிதக்கிறதே ! - துயர்
பொங்கிடும் துன்பம் மக்களின் வாழ்க்கையில்
கண்ணீரைச் சொரிகிறதே ! - அழும்
கண்ணீரைச் சொரிகிறதே ! (பேய் )
முடிப்பு
நின்றாடும் மேகங்கள் நிலையான வானத்தில்
நீருற்றும் களியாட்டமா ? - புவி
நெடுநாளில் காணாத நீங்காத வரலாற்று
நிலைசொல்லும் சதுராட்டமா ?
வெள்ளம் போதாது பாரென்றே ஊர்சூழ
பள்ளம் இருக்கின்ற இடமெல்லாம் நீர்சூழ (பேய் )
புரண்டாடும் வெள்ளத்தில் திரண்டாடும் இல்லங்கள்
மிரண்டாடும் நிலைசொல்லவா ? - அவை
முரண்பட்ட கொடியோரின் முளைவிட்ட பணத்தாசை
முகிழ்வித்த கதையல்லவா ?
போதும் மழையென்றே ஊர்கூறும் நிலைகொள்ள
வாழும் நகரத்தின் சிக்கல்கள் தனைசொல்ல (பேய் )
மண்ணாசை பேராசை மகிழ்கின்ற திருநாட்டின்
புண்ணான கதைகாணலாம் ! - இதைச்
சொன்னாலும் திருந்தாத சென்மங்கள் பலபேரின்
செருக்கான திமிர்காணலாம் !
வருங் காலங்கள் சிறப்புற்றே ஊர்வாழ
பெரும் வருத்தங்கள் மறைகின்ற நாள்காண (பேய் )
-இராதே
பேய்மழை பெய்து பெருவெள்ளம் பாய்ந்தே
ஊரெல்லாம் மிதக்கிறதே ! - துயர்
பொங்கிடும் துன்பம் மக்களின் வாழ்க்கையில்
கண்ணீரைச் சொரிகிறதே ! - அழும்
கண்ணீரைச் சொரிகிறதே ! (பேய் )
முடிப்பு
நின்றாடும் மேகங்கள் நிலையான வானத்தில்
நீருற்றும் களியாட்டமா ? - புவி
நெடுநாளில் காணாத நீங்காத வரலாற்று
நிலைசொல்லும் சதுராட்டமா ?
வெள்ளம் போதாது பாரென்றே ஊர்சூழ
பள்ளம் இருக்கின்ற இடமெல்லாம் நீர்சூழ (பேய் )
புரண்டாடும் வெள்ளத்தில் திரண்டாடும் இல்லங்கள்
மிரண்டாடும் நிலைசொல்லவா ? - அவை
முரண்பட்ட கொடியோரின் முளைவிட்ட பணத்தாசை
முகிழ்வித்த கதையல்லவா ?
போதும் மழையென்றே ஊர்கூறும் நிலைகொள்ள
வாழும் நகரத்தின் சிக்கல்கள் தனைசொல்ல (பேய் )
மண்ணாசை பேராசை மகிழ்கின்ற திருநாட்டின்
புண்ணான கதைகாணலாம் ! - இதைச்
சொன்னாலும் திருந்தாத சென்மங்கள் பலபேரின்
செருக்கான திமிர்காணலாம் !
வருங் காலங்கள் சிறப்புற்றே ஊர்வாழ
பெரும் வருத்தங்கள் மறைகின்ற நாள்காண (பேய் )
-இராதே
வியாழன், 10 டிசம்பர், 2015
குடி
எடுப்பு
குடிக்கக் கூடாது - மது
குடிக்கக் கூடாது !
தொடுப்பு
மடியைப் பிடித்துக் குடியைக் கொடுத்து
முடியைப் பிடித்து அடியைக் கொடுக்கும் ! (குடி)
முடிப்பு
குடிக்கக் குடிக்கப் போதையேறித் தவறுகள் நடக்கும் ;
குடியும் தெளிந்து பார்க்க மானம் குப்புறக் கிடக்கும் ;
விடிய விடியக் குடிப்பதினால் வேதனைப் பெருகும் ;
விடிவில் லாத வெற்றுவாழ்க்கை சோதனை இருகும் ! (குடி)
கட்டின தாலி கடையிலேறி வட்டிக்கு விற்கும் ;
கட்டின மனைவி காதல்வாழ்வு வீதியில் நிற்கும் ;
பட்டெனப் பேசி சட்டெனமூளும் சண்டைகள் மொய்க்கும் ;
விட்டுவி டாமல் கிட்டின பழக்கம் வீழ்ச்சிக்குள் துய்க்கும் ! (குடி)
ஈரல்குலையும் குடலும்வெந்து இரைப்பையும் அழுகும் ;
இறுதிநாட்கள் அமைதியிழந்து தொல்லையில் முழுகும் ;
உறவும் ஊரும் ஒன்றுசேர்ந்தே ஒதுக்கியே வைக்கும் ;
உறவின் பிரிவில் உழலும் மனதில் துன்பமே தைக்கும் ! (குடி)
- இராதே
செவ்வாய், 8 டிசம்பர், 2015
ஊசிட்டேரி
வெள்ளம்பாயும் ஊசிட் டேரி ! வண்ண வாரி !
அதில் பயனுறுதாம் புதுச் சேரி ! - மின்னும்
விளக் காகியே ஓளியே சுடர்
விழிமேவிய வணிதாவணி
வீசும்புகழ் அலங் காரி ! - ஊசி
விருப்பத்தில் அமைத்திட்ட ஏரி!
அலையுஞ் சுழலுங் கண்டு
வளையில் நுழையும் நண்டு
அருமைநடனங் காணல் ஈர்க்குமே ! - மீனும்
கரைத் துள்ளும் அழகினை வார்க்குமே! - ஆசை
ஆட்டுமே ! ஓசை கூட்டுமே !
எழிற் ஊட்டுமே ! இசை மீட்டுமே ! - நிதம்
மனதில் உழலும் துன்பம் ஓட்டுமே ! - மக்கள்
மனதில் மகிழும் இன்பம் பூட்டுமே !
கெண்டை மீனும் நாணும்
கண்டே ஊடல் காணும்
வண்டு சேரும் அல்லிக் கூட்டமே ! - செயற்
கண்டு மலர்த்தேன் ஈட்டமே ! - தமிழ்ச்
சிந்து பாடி அலை வந்துமோதிக் கரை
கண்டு ஆடும்மலர்த் தோட்டமே ! - இந்த
விந்தைதான் காணநல் நாட்டமே !
இயற்கையின் கொடையோ ? - இல்லை
செயற்கையின் கொடையோ ? - இந்த
எழில்நீர் நிலை
புவியின் மிசை வழியும்பொழில்
அசையுங் கடல்தானோ ?
ஏங்கும் புட் களமோ ? - மழை
தேங்கும் நீர் வளமோ ? - வாங்கும்
ஏரியின் முந்தும் மாதிரி - நீர்
சேர தேடிட ஓடிடக்
கூடுங் கடலோ ? எழிற்நீரின் கிடங்கோ ?
எண்ணில்லாத மடங்கோ ?
வான்தரு பொன்னோ ? மகிழும் இயற்கை
நமக்குத் தந்ததுவோ ?
-இராதே
அதில் பயனுறுதாம் புதுச் சேரி ! - மின்னும்
விளக் காகியே ஓளியே சுடர்
விழிமேவிய வணிதாவணி
வீசும்புகழ் அலங் காரி ! - ஊசி
விருப்பத்தில் அமைத்திட்ட ஏரி!
அலையுஞ் சுழலுங் கண்டு
வளையில் நுழையும் நண்டு
அருமைநடனங் காணல் ஈர்க்குமே ! - மீனும்
கரைத் துள்ளும் அழகினை வார்க்குமே! - ஆசை
ஆட்டுமே ! ஓசை கூட்டுமே !
எழிற் ஊட்டுமே ! இசை மீட்டுமே ! - நிதம்
மனதில் உழலும் துன்பம் ஓட்டுமே ! - மக்கள்
மனதில் மகிழும் இன்பம் பூட்டுமே !
கெண்டை மீனும் நாணும்
கண்டே ஊடல் காணும்
வண்டு சேரும் அல்லிக் கூட்டமே ! - செயற்
கண்டு மலர்த்தேன் ஈட்டமே ! - தமிழ்ச்
சிந்து பாடி அலை வந்துமோதிக் கரை
கண்டு ஆடும்மலர்த் தோட்டமே ! - இந்த
விந்தைதான் காணநல் நாட்டமே !
இயற்கையின் கொடையோ ? - இல்லை
செயற்கையின் கொடையோ ? - இந்த
எழில்நீர் நிலை
புவியின் மிசை வழியும்பொழில்
அசையுங் கடல்தானோ ?
ஏங்கும் புட் களமோ ? - மழை
தேங்கும் நீர் வளமோ ? - வாங்கும்
ஏரியின் முந்தும் மாதிரி - நீர்
சேர தேடிட ஓடிடக்
கூடுங் கடலோ ? எழிற்நீரின் கிடங்கோ ?
எண்ணில்லாத மடங்கோ ?
வான்தரு பொன்னோ ? மகிழும் இயற்கை
நமக்குத் தந்ததுவோ ?
-இராதே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






