வாளித் தண்ணீரைத்துழவுகிறது
நிலவு
நா சப்பு கொட்டுகிறதுதேனீயின்உழைப்பு
கானல் நீரைக்குடித்தேபசியாறுகிறதுவெயில்
நகம் கடிக்க
பிரசவிக்கின்றன
பிறைநிலாக்கள்
விழுது ஊஞ்சல்
நினைவுகள்
சிறகடிப்பு
-இராதே
பல்லாங்குழிஆடுங் காற்றுபுல்லாங்குழல்
வேலியில்
கதக்களிஓணான்
அடைபடுகிறது காவிரி
காகம்எங்கே ?
கரை படிந்த காலடிகள்துடைக்கும்அலைகள்
சாதிய நெடிதொடர் தும்மல்ஆணவக் கொலைகள்
-இராதே
கர்நாடகா ஆடும்கண்ணாம்பூச்சிகாவிரி
பாறையை அறைந்தபெருமிதத்துடன் திரும்பும்அலைகள்
சல்லடையில்அள்ளும் தண்ணீர்பனிக்கட்டி ?
நடமாடும்மலர்க் கண்காட்சிமகளிர் கல்லூரி
ஓட்டைகளில்ஒழுகுகிறது இசைநாதசுரம்
-இராதே
சுவடிக்குள்மயிலிறகுவாழ்க்கை
ஓடுகிறது வாழ்க்கைதுரத்தும் சிக்கல்களுக்குகால் வலிக்கவில்லை
எண்ணத்தைமேய்ந்து கொண்டிருக்கிறதுகவலை
சுழன்றேதேய்கிறது
நிலவு
மழைவருது ! மழைவருது !
குடுகுடுப்புக்காரன்தும்பி
-இராதே
கிறுக்கும் போதும்பெயரெழுதும்தூவல்
அயலக கடைகளில்ஆலும் வேலும்''கார்ப்பரேட்'' தந்திரம்
புறாசமைத்து பரிமாறப்படுகிறதுசமாதானம்
வணிக மையம்காவி மையம்கல்வி மைய்யம்
இலைகள் நடனம்இசைக்கிறதுகாற்று
-இராதே
தேய்ந்து கொண்டேவளர்கிறதுநிலா
பூடகம்நாடகம்ஊடகம்
சிந்திக்கொண்டேவழியமைக்கிறதுநீர்
சோம்பல் முறிக்கிறதுவானம்இடி
நடைக்கேற்றபடிஇசையமைக்கிறதுகொலுசு
-இராதே
ஒளிந்தாடும் நிலாஅசைகிறதுதென்னங்கீற்று
கூர்த்தீட்டிய வாள்மழுங்குகிறதுஅறிவு
குனிந்த தலைநிமிரவில்லைபெண்மை
இடை தேடிஇடர்படுகிறதுதென்றல்
நனைந்தே கிடந்தும்சுடுகிறதுநா
-இராதே