இராதே

இராதே
eradevadassou

சனி, 28 நவம்பர், 2026

குரங்கு குல்லா

 குரங்கும் குல்லாவும்



குரங்கு மரத்திலேறி

குரங்கு மரத்திலேறி

என்ன செய்தது ? - அதுவும்

என்ன செய்தது ?



மரத்தின் கிளையில் தாவி

மரத்தின் கிளையில் தாவி

ஊஞ்சலாடுதே - அதுவும்

ஊஞ்சலாடுதே !



ஊஞ்சலாடி ஆடி

ஊஞ்சலாடி ஆடி 

என்ன செய்தது ? - அதுவும்

என்ன செய்தது !



மரத்திலிருந்து  குதித்தே

மரத்திலிருந்து குதித்தே

சுற்றிப் பார்த்ததே - அதுவும்

சுற்றிப் பார்த்ததே !



சுற்றிப் பார்த்த குரங்கு

சுற்றிப் பார்த்த குரங்கு

என்ன செய்தது ? - அதுவும்

என்ன செய்தது !



உறங்கும் குல்லாகாரன்

உறங்கும் குல்லாகாரன்

குல்லா எடுத்ததே - அவனின்

குல்லா எடுத்ததே !



குல்லா எடுத்த குரங்கு

குல்லா எடுத்த குரங்கு

என்ன செய்தது ? - அதுவும்

என்ன செய்தது !



குல்லா தலையில் போட்டு

குல்லா தலையில் போட்டு

ஏறி நின்றதே - மரத்தில்

ஏறி நின்றதே !



விழித்த குல்லாகாரன்

விழித்த குல்லாகாரன்

குல்லா தேடினான் - தனது

குல்லா தேடினான் !



குல்லா எங்கும் காணோம்

குல்லா எங்கும் காணோம்

மேலே பார்க்கிறான் - உச்சி

மேலே பார்க்கிறான் !



குரங்கு குல்லா போட்டே

குரங்கு குல்லா போட்டே

ஓடிப் போனதே - அதுவும்

ஓடிப் போனதே !



     - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக