இராதே

இராதே
eradevadassou

சனி, 19 மார்ச், 2022

பனங்கற்கண்டு

 பனங்கற்கண்டு ( 100 ) 



 பதநீர்க் காய்ச்சக் கிடைக்கும் பொருளே 

பனங்கற் கண்டாம் பனங்கற் கண்டாம் ; 

இதயங் காக்கக் குருதி அழுத்தம் 

 இயல்பாய் இயக்கும் பனங்கற் கண்டாம் ;

 இதமாய் மூளைச் செயலைத் தூண்டி 

 இழக்கும் நினைவின் ஆற்றல் பெருக்கும் 

பதமாய்த் தொண்டைக் கட்டை நீக்கும் 

 பனங்கற் கண்டாம் பனங்கற் கண்டாம் ! 

 


உடலின் வெப்பஞ் சீராய் மாற்றி 

 உடனே குளிர்ச்சித் தருங்கற் கண்டாம் ; 

உடலின் சோர்வைக் கடுதே போக்கி 

 உவகை மனத்தைத் தருங்கற் கண்டாம் ; 

அடர்ந்த காசம், கண்நோய் விலக்கி 

 அதிக நன்மை தருங்கற் கண்டாம் ; 

படரும் தோல்மேல் விரவும் சிரங்கின் 

 பரவல் தடுக்கும் பனங்கற் கண்டாம் ! 



 சிறுநீர் அகத்தின் சிக்கல் அறுத்தே 

 சிறப்பாய் இயக்கும் பனங்கற் கண்டாம் ; 

சிறுநீர்க் கற்கள் சிதைத்துக் கரைக்கச் 

 செய்யும் உணவு பனங்கற் கண்டாம் ; 

திருவாய் நாற்றம் மணக்க வைக்கும் 

 திறன்கொள் மருந்துப் பனங்கற் கண்டாம் ; 

இருமல் மார்புச் சளியை விரட்டும் 

 இயற்கை விருந்து பனங்கற் கண்டே ! 


                                                              - இராதே

வாழைப்பழம்

 வாழைப்பழம் (99) 



 குருதி அணுக்கள் பெருக்கும் பழமாம் 

 குருதிச் சோகை நீக்கும் பழமாம் ; 

குருதி அழுத்தம் தடுக்கும் பழமாம் 

 குருதி மூலந் தீர்க்கும் பழமாம் ; 

பெருமை சூழ்ந்த மூன்று கனியுள் 

 பெரிதும் கிடைக்கும் வாழைப் பழமாம் 

அருமை பயன்கள் கொடையாய் வழங்கும் 

அமுதக் கனியே வாழைப் பழமாம் ! 



 நரம்புத் தளர்ச்சி நோய்கள் விலக்கும் 

 நாரின் சத்தால் குடலைக் காக்கும் ; 

மிரட்டும் மலத்தின் சிக்கல் அறுக்கும் 

 மினுக்கும் உடற்தோல் தோன்ற உதவும் ; 

திரண்டு மிகுமே மூளைத் திறன்கள் 

 தேற்றும் உடலை வாழைப் பழமாம் ! 



 வயிற்றுப் போக்கைக் கட்டுப் படுத்தும் 

 மாலைக் கண்நோய் வராது நிறுத்தும் ; 

உயிர்ச்சத் தளிக்கும் உயர்ந்த மருந்தாய் 

உணவை எளிதாய்ச் செரிக்க வைக்கும் ;

 துயிலை இரவில் வளர்க்கும் நீட்டும் 

 துன்பப் பக்க வாதம் விரட்டும் ; 

உயிர்கள் நன்மை உறவு இயற்கை 

 உலகிற் கீந்த பழமே வாழை ! 


                                                       - இராதே

புளியம்பழம்

 புளியம் பழம் (98) 


 ஒட்டாத ஓட்டுக்குள்ளே புளியம்பழம் 

 உடம்புக்கு நல்லதுதான் புளியம்பழம் ; 

கட்டாது மலத்தினை இளக்கிவிடும் ; 

கால்,இடுப்பு வலிச்சுளுக்கை அகற்றிவிடும் ;

 தட்டுப்படும் நீர்க்கடுப்பைத் தணித்துவிடும் 

தங்குகிறக் கொழுப்பினைக் கரைத்துவிடும் ;

 மட்டுபடும் ஆறாத புண்களுமே ; 

 மலேரியா காய்ச்சலும் மடிந்திடுமே ! 



 முட்டுவலி வீக்கத்தைக் குறைத்துவிடும் 

முடக்குவாதம் இல்லாமல் போக்கிவிடும் ; 

கட்டுப்படா வாய்ப்புண்கள் ஓடிவிடும் 

 கரகரக்குந் தொண்டைநோய் நீங்கிவிடும் ;

 சட்டென்றே பித்தநோய்கள் மறைந்துவிடும் 

சரியாகா அழற்சியை எதிர்த்துநிற்கும் ; 

முட்டிவருங் குமட்டலும் வாந்தியையும் 

முடிவுக்கே கொண்டுவரும் புளியம்பழம் ! 



 கரும்புள்ளி தோல்பிணிகள் ஆற்றிவிடும் 

கடுக்கிற வயிற்றுவலி விலக்கிவிடும் ; 

அரும்பிடும் முகப்பொலிவைக் கொடுத்துவிடும் 

அடங்காத இருமல்,சளி அடக்கிவிடும் ; 

பெருகிடும் பொடுகினை அழித்துவிடும் 

பிறப்புறுப்புத் தொற்றினை விரட்டிவிடும் ;

 அருந்தொண்றாற் றிவருதே புளியம்பழம் 

அன்றாடம் உணவில்சேர் புளியம்பழம் ! 


                                                             - இராதே

வெள்ளரிக்காய்

 வெள்ளரிக்காய் (97) 



 வெள்ளரிக் கொடியின் காய்தான் 

 வெப்பத்தைத் தணிக்குங் காய்தான் ; 

துள்ளிடும் நாவின் வறட்சித் 

 துரத்தியே அடக்குங் காய்தான் ; 

உள்ளெழுஞ் சிவப்ப ணுக்கள் 

 ஊறிடுங் குருதிக் கூட்டும் ; 

உள்ளூறக் குடலில் படியும் 

 ஊதுபுகை நச்சை அகற்றும் ! 



 குடலுள்ளே படருங் கொழுப்பைக் 

 குன்றிடச் செய்தே நீக்கும் ; 

குடலதன் தூய்மை பேணும் 

 குடல்வளர்ப் புண்கள் ஆற்றும் ; 

உடலதன் எடையைக் குறைக்கும் 

 உதிர்ந்திடும் முடியைத் தடுக்கும் ; 

தொடர்ந்திடும் வாயின் நாற்றத் 

தொல்லையைத் தீர்த்தே கட்டும் ! 



 வெள்ளரி மலத்தை இளக்கும் 

 வெள்ளரி ஈரல் காக்கும் ; 

வெள்ளரிச் சிறுநீர்ப் பெருக்கும் ; 

 வெள்ளரி உடற்தோல் தேற்றும் ; 

வெள்ளரி உண்ண மூளை 

 வேகமாக செயலில் இறங்கும் ; 

வெள்ளரிக் காயைத் தின்போம் 

 வேண்டிய நன்மை கொள்வோம் ! 


                                                   - இராதே

வாழைத்தண்டு

 வாழைத்தண்டு (96) 



 வாழைத் தண்டு நல்லுணவாம் 

 வளருந் தசைக்கு நல்லுரமாம் ; 

வாழைத் தண்டின் சமையலிலே 

 வளமை யெல்லாம் அணிசேரும் ; 

வாழைத் தண்டை உண்பதினால் 

 மறையுங் குருதிச் சோகையுமே ; 

வாழைத் தண்டை மகிழ்ந்துண்டே 

 வலிமை உடலைப் பெற்றிடுவோம் ! 



 குடலில் சிக்கும் தலைமுடியைக் 

 குடலை விட்டே வெளியேற்றும் ; 

குடலின் நச்சுக் கழிவுகளின் 

 குடியைக் கெடுத்தே அகற்றிவிடும் ; 

குடலின் அமிலப் பெருக்கத்தைக் 

 குன்றச் செய்தே சமப்படுத்தும் ; 

உடலின் எடையைக் குறைத்துவிடும் 

 உணவுச் செரிக்க வழிவகுக்கும் ! 



 சிறுநீர்த் தொற்றை விரட்டிவிடும் 

 சிறுநீர்ப் பாதை தூய்மையுறும் ; 

சிறுநீர்ச் சுருக்கும், எரிச்சலும் 

 சிறப்பாய் நிற்கும் குணமாகும் ; 

சிறுநீர்க் கற்கள் கரைந்துவிடும் 

 சிறுநீ ரகத்தின் காவலனாம் ; 

சிறுக சிறுக நீரிழிவைச் 

 சிதைக்கும் வாழைத் தண்டுண்போம் ! 


                                                             - இராதே

சேலாப்பழம்

 சேலாப் பழம் (95) (செர்ரிப் பழம்) 



 சேலாப் பழமே செர்ரிப் பழமாம் 

 சேருந் தொற்றை அழிக்கும் பழமாம் ; 

தோலால் விளையுஞ் சுருக்கம் போக்கித் 

தோற்றம் இளமை கூட்டும் பழமாம் ; 

கோலக் கண்ணின் பார்வை மங்கும் 

 குறைகள் நீங்க உதவும் பழமாம் ; 

மாலைக் கண்நோய்த் தீர்க்கும் பழமாம் 

மனத்தின் அழுத்தம் அகற்றும் பழமாம் ! 



 உடலில் நரம்பின் இறுக்கம் தளர்த்தி 

 உறக்கம் கொடுக்கும் உயர்ந்த பழமாம் ; 

குடலின் காணும் நோய்கள் விரட்டுங் 

 குணத்தை நல்கும் கோலிப் பழமாம் ; 

உடலின் எடையை இறங்க வைக்கும் 

 உறையுங் குருதித் தடுத்துப் பெருக்கும் ; 

அடங்கா நோயை எதிர்க்கும் ஆற்றல் 

 அளிக்கும் மருந்துப் பண்புப் பழமாம் ! 



 புற்றின் அணுக்கள் வளர்ச்சி ஒடுக்கும் 

 புரட்டும் மலத்தின் சிக்கல் அறுக்கும் ; 

பற்றும் பொடுகை ஒழித்துத் துரத்தும் 

 பசிக்கச் செரிக்கும் ஆற்றல் வளர்க்கும் ; 

முற்றும் நரையைக் கருமை யாக்கும் 

 முடிகள் உதிர்வை முடக்கி நிறுத்தும் ; 

சற்றும் சளைக்கா துழைக்கும் பழமாம் 

 சாலச் சிறந்த சேலாப் பழமாம் ! 

                                                         - இராதே

ஆல்பக்கோடா பழம்

 ஆல்பக்கோடா பழம் (94) 


 அல்பக்கோடா பழமே பழமே 

 அதிகபுளிப்புச் சுவையைத் தருமே ; 

தொல்லையாமே மலத்தின் சிக்கல்  

தொடராமல் தடுக்கும் தடுக்கும் ; 

அல்லல்படு காய்ச்சல் நேரம் 

 அடங்கிடுமே வாயின் கசப்பு ; 

மெல்லஉடல் சூட்டைத் தணிக்கும் 

 மேவுநாவின் வறட்சி நீக்கும் !



 குமட்டலையும் விரைந்து முறிக்கும் 

 குருதிநாள அடைப்பைக் கரைக்கும் ;

சுமையாகும் உடலின் எடையைச் 

சுறுசுறுப்பாய்க் குறைக்குங் குறைக்கும் ; 

அமைதியாக நச்சுக் கழிவை 

 அகத்திலிருந்து வெளியே தள்ளும் ; 

இமைபோல இதயங் காக்கும் 

 எலும்பினையும் உறுதி யாக்கும் ! 



 உடலுக்குப் புத்துணர் வளிக்கும் 

 உடல்வலிமை ஏற்றுந் தேற்றும் ; 

அடங்காதத் தலைநோய் மாயும் 

 அரிப்புச்சொறி சிரங்கை விரட்டும் ; 

இடைஞ்சல்தரு சிறுநீர்க் கற்கள் 

 இந்தபழம் ஈயுந் தீமை ; 

அடைமழைப்போல் பயன்கள் பொழியும் 

ஆல்பக்கோடா பழமாம் பழமாம் ! 

                                                              - இராதே