ஐலேசா
ஏலேலோ ஐலேசா
இரையுங் கடல் ஐலேசா
ஏலேலோ ஐலேசா
எங்கள் கடல் ஐலேசா
அலையடிக்குது ஐலேசா
ஆடும் படகு ஐலேசா
வலைவிரியுது ஐலேசா
வலையில் மீன்கள் ஐலேசா
தொலைவில் நிலவு ஐலேசா
கடலின் விளக்கு ஐலேசா
மலைமலையாய் ஐலேசா
மாட்டும் மீன்கள் ஐலேசா
விரையும் படகு ஐலேசா
விடியுங்காலை ஐலேசா
கரைதெரியுது ஐலேசா
கரையில் படகு ஐலேசா
திரையின் நுரைகள் ஐலேசா
கரையில் மறையும் ஐலேசா
வரத்து மீன்கள் ஐலேசா
மலிவுவிலையில் ஐலேசா
ஏலேலோ ஐலேசா
ஏலமீன்கள் ஐலேசா
ஏலேலோ ஐலேசா
எடுத்து போங்க ஐலேசா
- பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக